[X] Close

கணித்த அஜித்: நடிகரான  ராஜ் ஐயப்பா


  • kamadenu
  • Posted: 11 May, 2019 17:34 pm
  • அ+ அ-

-ஸ்கிரீனன்

நடிகராக அனைத்து அம்சங்களும் தெரிகின்றன என்று அஜித் கணித்தது போலவே, தமிழ்த் திரையுலகில் '100' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகியுள்ளார் ராஜ் ஐயப்பா.

சாம் ஆண்டன் இயக்கத்தில் அதர்வா, ஹன்சிகா, ராதாரவி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் '100'. ஆரா சினிமாஸ் தயாரித்துள்ள இப்படம், நீண்ட நாட்களாக வெளியீட்டுக்காக காத்திருந்தது.

பைனான்ஸ் பிரச்சினையில் சிக்கியதால், பலமுறை வெளியீடு தள்ளிவைக்கப்பட்டது. தற்போது அனைத்து பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டும் இன்று (மே 11) வெளியாகியுள்ளது. இப்படத்தின் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமாகியுள்ளார் ராஜ் ஐயப்பா. இவர் நடிகராக அனைத்து அம்சங்களும் இருக்கின்றன என்று அஜித் கணித்தது போலவே நடிகரானது எப்படி? என்று நினைப்பவர்களுக்கு, சின்ன ப்ளாஷ்பேக்.

'அமராவதி' படத்தில் அஜித்துடன் நடித்த பானு பிரகாஷுடைய மகன்தான் ராஜ் ஐயப்பா. ஒருநாள் அஜித்தின் மேலாளரைச் சந்திக்க பானு பிரகாஷ் வந்திருக்கிறார். அப்போது இருவரும் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள்.

அச்சமயத்தில் மேலாளருக்கு அஜித்திடமிருந்து போன் வந்துள்ளது. தன்னுடைய பேச்சுக்கு இடையே "பானு பிரகாஷ் சார் வந்திருக்கார்" என்று சொல்ல, "அப்படியா... கொடுங்கள். பேசி ரொம்ப நாளாகிவிட்டது" என்று அஜித் சொல்லியிருக்கார். உடனே அஜித் - பானு பிரகாஷ் இருவரும் நீண்ட நேரம் தொலைபேசியில் பேசியுள்ளனர்.

அப்போது குடும்பத்தைப் பற்றி அஜித் விசாரிக்க, தன்னுடைய மகன் ராஜ் ஐயப்பாவைப் பற்றிச் சொல்லியிருக்கிறார். 'புகைப்படம் அனுப்பு நான் பார்க்கிறேன்' என்று அஜித் சொல்ல, ராஜ் ஐயப்பாவின் புகைப்படத்தை வாட்ஸ் - அப்பில் அனுப்பியுள்ளார். அதைப் பார்த்துவிட்டு ”மகனிடம் நடிகராக அனைத்து அம்சங்களும் இருக்கின்றன. சரியான பழக்கவழக்கங்களுடன் இருந்தால், கண்டிப்பாக ஒரு ரவுண்ட் வருவார்” என்று சொல்லியிருக்கிறார் அஜித். பானு பிரகாஷுக்கோ பெரும் மகிழ்ச்சி.

அதுவரை மகனை நடிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணம்கூட பானு பிரகாஷுக்கு இல்லை. அஜித் சொல்கிறாரே என்று நடிக்கவைக்கும் பணிகளைத் தொடங்கியுள்ளனர். அப்போதுதான் '100' படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்துக்கு ஆடிஷன் நடந்துள்ளது. அங்கு போய் தேர்வாகி, நடித்திருக்கிறார்.

தற்போது லயோலா கல்லூரியில் படித்து வருகிறார் ராஜ் ஐயப்பா. நல்ல கதைகள் வரும் பட்சத்தில், தொடர்ச்சியாக நடிப்பிலும் கவனம் செலுத்த முடிவு செய்திருக்கிறார்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close