[X] Close

விஜய் தேவரகொண்டா தயாரிப்பில் வாணி போஜன்


  • kamadenu
  • Posted: 11 May, 2019 14:55 pm
  • அ+ அ-

தெலுங்கின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் தேவரகொண்டா, தயாரிப்பாளராக அறிமுகமாகிறார்.

‘அர்ஜுன் ரெட்டி’ தெலுங்குப் படத்தின் பிரபலமானவர் விஜய் தேவரகொண்டா. தெலுங்கு சினிமாவைத் தாண்டி, இந்தியா முழுவதும் இவருக்குப் பல ரசிகர்கள் கிடைத்தனர். தமிழ், இந்தி ஆகிய மொழிகளில் இந்தப் படம் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது.

‘அர்ஜுன் ரெட்டி’யைத் தொடர்ந்து விஜய் தேவரகொண்டா நடித்த ‘கீதா கோவிந்தம்’, ‘டாக்ஸி வாலா’ படங்களும் சூப்பர் ஹிட். தற்போது விஜய் தேவரகொண்டா நடிப்பில் ‘டியர் காம்ரேட்’ படம் ரிலீஸுக்குத் தயாராகியுள்ளது.

தெலுங்கு மட்டுமின்றி, தமிழ், மலையாளம் மற்றும் கன்னடம் என 4 தென்னிந்திய மொழிகளிலும் இப்படம் உருவாகியுள்ளது. பரத் கம்மா இந்தப் படத்தை இயக்கியுள்ளார். ராஷ்மிகா மண்டன்னா ஹீரோயினாக நடித்துள்ள இந்தப் படம், வருகிற ஜூலை 26-ம் தேதி ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தயாரிப்பாளராக அறிமுகமாகிறார் விஜய் தேவரகொண்டா. ‘பெல்லி சூப்புலு’ படத்தை இயக்கிய தருண் பாஸ்கர், இந்தப் படத்தை இயக்குகிறார். சமீர் என்ற புதுமுகம் ஹீரோவாக அறிமுகமாகிறார். அவர் ஜோடியாக வாணி போஜன் நடிக்கிறார்.

சின்னத்திரையில் பிரபலமான வாணி போஜன், சார்லஸ் இயக்கத்தில் வைபவ் ஜோடியாக ஒரு தமிழ்ப் படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை நிதின் சத்யா தயாரித்துள்ளார். இன்னும் இந்தப் படம் ரிலீஸாகாத நிலையில், விஜய் தேவரகொண்டா படத்தின் மூலம் தெலுங்கிலும் அறிமுகமாகிறார் வாணி போஜன்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close