[X] Close

‘பிக் பாஸ் 3’-ல் கலந்து கொள்கிறேனா? - லைலா மறுப்பு


3

  • kamadenu
  • Posted: 11 May, 2019 13:09 pm
  • அ+ அ-

‘பிக் பாஸ் 3’ நிகழ்ச்சியில் தான் கலந்துகொள்வதாக வெளியான செய்தி பொய்யானது எனத் தெரிவித்துள்ளார் லைலா.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோ, ‘டான்ஸ் ஜோடி டான்ஸ் ஜூனியர்’. சுதா சந்திரன், சினேகா மற்றும் லைலா மூவரும் இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக இருந்து நிகழ்ச்சியை வழிநடத்தினர். இதன் இறுதிப்போட்டி சமீபத்தில் நடைபெற்றது. ராதிகா சரத்குமார் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

இந்நிலையில், விஜய் தொலைக்காட்சியில் அடுத்த மாதம் ஒளிபரப்பாகவுள்ள ‘பிக் பாஸ் 3’ நிகழ்ச்சியில், லைலா போட்டியாளராகக் கலந்து கொள்கிறார் என செய்திகள் வெளியாகின. இந்த நிகழ்ச்சியை, இம்முறையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்குகிறார்.

ஆனால், இந்தச் செய்தியை லைலா மறுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம் லைலா ‘பிக் பாஸ் 3’-ல் கலந்து கொள்ளவில்லை என்பது உறுதியாகியுள்ளது.

நடிகை சாந்தினி தமிழரசன், நடிகர் மற்றும் ஆர்.ஜே.வான ரமேஷ் திலக் ஆகியோர் ‘பிக் பாஸ் 3’-ல் கலந்துகொள்ள இருப்பதாக செய்திகள் வெளியானது. ரமேஷ் திலக் அந்தச் செய்தியை மறுக்க, சாந்தினி மட்டும் ‘பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது’ எனத் தெரிவித்துள்ளார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close