[X] Close

மீண்டும் படம் இயக்கும் எஸ்.ஏ.சந்திரசேகரன்


  • kamadenu
  • Posted: 11 May, 2019 09:45 am
  • அ+ அ-

-ஸ்கிரீனன்

முக்கியக் கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்த எஸ்.ஏ.சந்திரசேகரன், தற்போது மீண்டும் படம் இயக்க முடிவு செய்துள்ளார்.

'சட்டம் ஒரு இருட்டறை' படத்தின் மூலமாக தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானவர் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன். அதற்குப் பிறகு பல வெற்றிப் படங்களை இயக்கியவர். ஷங்கர், ராஜேஷ், பொன்ராம் போன்ற முன்னணி இயக்குநர்கள் பலரும் இவரிடம் உதவி இயக்குநர்களாகப் பணிபுரிந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

2015-ம் ஆண்டு 'டூரிங் டாக்கீஸ்' என்ற படத்தில் நடித்து, தயாரித்து இயக்கினார். இடையே உடல்நிலை கொஞ்சம் சரியில்லாத காரணத்தால், 'டிராஃபிக் ராமசாமி', 'கொடி' உள்ளிட்ட சில படங்களில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தார். ஆனால், படம் இயக்குவது குறித்து எந்தவொரு முடிவுமே எடுக்காமல் இருந்தார்.

தற்போது மீண்டும் இயக்குநராகத் திரும்ப பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ளார் எஸ்.ஏ.சந்திரசேகரன். அதில் ஜெய்யை நடிக்கவைக்கப் பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் இப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close