[X] Close

வங்கத்தில் இருந்து மீண்டும் தமிழுக்கு..


  • kamadenu
  • Posted: 11 May, 2019 08:05 am
  • அ+ அ-

கன்னடத்தில் வெளிவந்த ‘தேசி’ திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் மணி. தொடர்ந்து பெங்காலி, இந்தி உட்பட பல மொழிகளில் நடித்து ‘பரம்ஸ்ரீ’, ‘கவுரவ் சம்மான்’, ‘பெங்கால் சாதனை விருது’ என்பது உட்பட பல விருதுகளைப் பெற்று கவனம் ஈர்த்து வருகிறார். தமிழை பூர்வீகமாகக் கொண்ட இவர், தமிழில் ஆக்சன் கலந்த த்ரில்லர் படத்தில் நடிக்க உள்ளார்.

‘‘பல மொழி நடிகராக இருப்பது பெருமையாக இருக்கிறது. இந்தி, பெங்காலியில்  நடிப்பதோடு, தென்னிந்தியாவில் இருந்து பெங்காலி மொழியில் பாடகரான முதல் நடிகர் என்ற பெருமையும் எனக்கு உண்டு. தாய்மொழியான தமிழில் நடிக்க வேண்டும் என்ற எனது நீண்டநாள் கனவும் தற்போது நிறைவேற இருக்கிறது. ஏஆர்கே ராஜராஜா இயக்கும் புதிய படம் மூலம் தமிழ் திரையுலகில் கால் பதிக்கிறேன். இது முழு ஆக்சன் படமாக இருக்கும். அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது’’ என்கிறார் மணி.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close