[X] Close

திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் தனி அதிகாரிக்கு உதவும் குழுவுக்கு தடை விதிக்க மறுப்பு


  • kamadenu
  • Posted: 11 May, 2019 07:30 am
  • அ+ அ-

தயாரிப்பாளர் சங்க தனி அதிகாரிக்கு உதவ நியமிக்கப்பட்ட தற்காலிக குழுவுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது.

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க தனி அதிகாரியாக மாவட்டப் பதிவாளரான என்.சேகர் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு உதவியாக செயல்பட திரைப்படஇயக்குநர் பாரதிராஜா, சத்யஜோதி டி.ஜி.தியாகராஜன் உள்ளிட்ட 9 பேர் அடங்கிய தற்காலிக குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இக்குழுவின் நியமனத்துக்கு தடை விதிக்கக் கோரி தயாரிப்பாளர் சங்க செயலாளரான கதிரேசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணை நேற்று நீதிபதி எஸ்.வைத்யநாதன் முன்பு நடந்தது. அப்போது ‘‘ஏற்கெனவே தயாரிப்பாளர் சங்கத்துக்கு தனி அதிகாரியாக என்.சேகர் நியமிக்கப்பட்டதை எதிர்த்து நடிகர் விஷால் வழக்கு தொடர்ந்து நிலுவையில் உள்ளது. இந்தசூழலில் தற்காலிக குழுவை அமைக்க தனி அதிகாரிக்கு எந்த அதிகாரமில்லை. தற்போது இந்தக்குழுவில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்களுக்கு எதிராகவும் புகார்கள் உள்ளது. எனவே அவர்களின் நியமனத்துக்கு தடை விதிக்க வேண்டும்’’ என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

ஆனால் அரசு தரப்பில், ‘‘தயாரிப்பாளர் சங்கத்தை நிர்வகிக்க நியமிக்கப்பட்டுள்ள தனி அதிகாரிக்கு உதவியாக செயல்படவே தற்போது இந்த 9 பேர் அடங்கியதற்காலிக குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு ஒருபோதும் சங்க நிர்வாகத்தில் தலையிடாது’’ என வாதிடப்பட்டது. அதையடுத்து நீதிபதி, இந்த தற்காலிக குழுவுக்குதடை விதிக்க மறுத்தும், அதேநேரம் இக்குழு தன்னிச்சையாக செயல்படக்கூடாது எனஉத்தரவிட்டும் வழக்கு விசார ணையை தள்ளி வைத்தார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close