[X] Close

மே 11-ல் 'அயோக்யா' வெளியீடு? - பேச்சுவார்த்தையில் உடன்பாடு: விஷால் சூசகம்


11

  • kamadenu
  • Posted: 10 May, 2019 21:06 pm
  • அ+ அ-

-ஸ்கிரீனன்

பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதால், விஷால் நடித்துள்ள 'அயோக்யா' திரைப்படம் நாளை வெளியாகும் என தெரிகிறது.

வெங்கட்மோகன் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள படம் ‘அயோக்யா’. இந்தப் படத்தில் ராஷி கண்ணா, பார்த்திபன், கே.எஸ்.ரவிகுமார், தேவதர்ஷினி, வம்சி கிருஷ்ணா, பூஜா தேவரியா, சோனியா அகர்வால் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் வெளியான ‘டெம்பர்’ தெலுங்குப் படத்தின் ரீமேக் இது.

நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்த இப்படம்,  இன்று (மே 10) வெளியீடாக இருந்தது. ஆனால் தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட திடீர் பண நெருக்கடி காரணமாக வெளியாகவில்லை.  காலை 8 மணி காட்சிக்கு திரையரங்கிற்கு வந்த ரசிகர்கள் பெரும் ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளனர்.

காலையில் 'அயோக்யா' வெளியாகாதது குறித்து விஷால் தனது ட்விட்டர் பதிவில் அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார். உரிமைகள் விற்பனையில் ஏற்பட்ட சிக்கலில் படம் வெளியாகவில்லை என தகவல் வெளியானது.

சிக்கலின்றி வெளிக் கொண்டுவர இன்று மதியம் முதலே பேச்சுவார்த்தை நடைபெற்றது. பலதரப்பட்ட பேச்சுவார்த்தைக்கு பின்பு ஒருவழியாக சமரசம் ஏற்பட்டு நாளை (மே 11) வெளியாகும் என தெரிகிறது. நாளை பத்திரிகையாளர்களுக்கான பிரத்யேக காட்சிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 'அயோக்யா' சிக்கல் தீர்ந்துவிடும் என்பது உறுதியாகியுள்ளது

'அயோக்யா' சிக்கல் தீர்க்கப்பட்டு குறித்து விஷால் தனது ட்விட்டர் பதிவில், “நான் என்றும் 'அயோக்யா'வை விட்டுக் கொடுக்க மாட்டேன். அது எனக்கு விசேஷமான படம். ஏனென்றால் அது இந்த சமூகத்துக்காக. பாலியல் பலாத்காரத்துக்கு தூக்கு தண்டனை என்பதை திரையில் கொண்டு வர வாய்ப்பு கிடைத்தது. அது கண்டிப்பாக வெளியே வரும். இந்தப் படத்தை நினைத்து பெருமையடைகிறேன்” என்று தெரிவித்துள்ளார்

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close