[X] Close

திருமண தேதியை உறுதிப்படுத்திய விஷால்


  • kamadenu
  • Posted: 10 May, 2019 20:26 pm
  • அ+ அ-

-ஸ்கிரீனன்

அனிஷாவுடனான தனது திருமணத் தேதியை, 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார் விஷால்

நடிகர் விஷால் - அனிஷா திருமண நிச்சயதார்த்தம் ஹைதராபாத்தில் மார்ச் 16-ம் தேதி படுவிமர்சையாக நடைபெற்றது. திருமணம் எப்போது என்பது அறிவிக்காமலே இருந்தது.

நடிகர் சங்கத்தின் கட்டிடப் பணிகள் முடிவடைந்து, அதில் தான் திருமணம் செய்து கொள்வேன் என்று விஷால் பல பேட்டிகளில் தெரிவித்துள்ளார். இதனால், நடிகர் சங்கத்தின் கட்டிடப் பணிகள் எப்போது முடிவடையும் என்ற கேள்வி எழுந்தது. நடிகர் சங்கத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளதால், கட்டிடத்தின் பணிகள் தாமதமாகும் என தெரிகிறது.

இந்நிலையில், முதன் முறையாக தனது திருமணத் தேதியை 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார் விஷால். அப்பேட்டியில், "நான் ஓய்வின்றி வேலை செய்துகொண்டிருந்தேன். எந்தப் புள்ளியிலாவது நிறுத்தி திருமணம் செய்து கொள்ள வேண்டும் இல்லையா? அக்டோபர் 9 அன்று திருமணம் நடைபெறவுள்ளது. இன்னும் எந்த இடம் என்பது முடிவாகவில்லை” என்று தெரிவித்துள்ளர் விஷால்

விஷாலை திருமணம் செய்து கொள்ளப் போகும் அனிஷா, தெலுங்கில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'அர்ஜுன் ரெட்டி' படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்தவர் என்பது நினைவுக் கூரத்தக்கது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close