[X] Close

'கொம்புவச்ச சிங்கம்டா’ படப்பிடிப்பு நிறைவு: செப். வெளியீடு


  • kamadenu
  • Posted: 10 May, 2019 20:28 pm
  • அ+ அ-

-ஸ்கிரீனன்

சசிகுமார் நடிப்பில் உருவாகி வரும் 'கொம்புவச்ச சிங்கம்டா' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. செப்டம்பரில் வெளியாகும் என அறிவிப்பு

'குற்றம் 23', 'தடம்' ஆகிய படங்களைத் தொடர்ந்து இந்தர்குமார் தயாரிப்பில் உருவாகி வந்த படம் 'கொம்புவச்ச சிங்கம்டா'. 'சுந்தரபாண்டியன்' படத்துக்குப் பிறகு சசிகுமார் - எஸ்.ஆர்.பிரபாகரன் இருவரும் இணைந்து பணிபுரிந்து வருகிறார்கள்.

1990 - 1994 காலகட்டங்களில் தமிழகத்தின் ஒரு சிறு நகரத்தில் நடந்த, பரபரப்பான உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இக்கதையை இயக்கி வருகிறார் எஸ்.ஆர்.பிரபாகரன். மடோனா செபாஸ்டியன், சூரி, இயக்குனர் மகேந்திரன், ஹரீஷ் ஃபெராடி சென்றாயன் உள்ளிட்ட பலர் சசிகுமாருடன் நடித்து வருகிறார்கள்.

நவம்பர் 12-ம் தேதி தொடங்கிய படப்பிடிப்பு இன்றுடன் (மே 10) முடிவுற்றதாக படக்குழு அறிவித்துள்ளது.  காரைக்குடி, பொள்ளாச்சி, பழனி, தென்காசி, கோவில்பட்டி, விருதுநகர், குற்றாலம் உள்ளிட்ட பகுதிகளில் இப்படத்தை படமாக்கியுள்ளனர். ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்ய, திபு நைனன் தாமஸ் இசையமைத்துள்ளார்.

சசிகுமார் நடிப்பில் முதலாவதாக 'நாடோடிகள் 2' வெளியாகவுள்ளது. அதனைத் தொடர்ந்து இப்படம் வெளியாகும் என தெரிகிறது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close