[X] Close

'கேம் ஓவர்' அப்டேட்: இந்தியில் வெளியிடும் அனுராக் காஷ்யப்


  • kamadenu
  • Posted: 10 May, 2019 18:30 pm
  • அ+ அ-

-ஸ்கிரீனன்

டாப்ஸி நடிப்பில் உருவாகியுள்ள 'கேம் ஓவர்' படத்தை இந்தியில் வெளியிடவுள்ளார் பிரபல பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப்.

நயன்தாரா நடிப்பில் பெரும் வரவேற்பைப் பெற்ற படம் 'மாயா'. அஸ்வின் சரவணன் இயக்கிய அப்படத்தை பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்தது. அப்படத்தைத் தொடர்ந்து எஸ்.ஜே.சூர்யா நடித்த 'இறவாக்காலம்' படத்தை இயக்கினார் அஸ்வின் சரவணன். அப்படம் வெளியீட்டுப் பிரச்சினையில் சிக்கியுள்ளது.

இவ்விரண்டு படங்களைத் தொடர்ந்து சஷிகாந்த் தயாரிப்பில் 'கேம் ஓவர்' எனப் பெயரிடப்பட்ட படத்தைத் தொடங்கினார் அஸ்வின் சரவணன். 35 நாட்களில் ஒட்டுமொத்தப் படப்பிடிப்பையும் சரியாகத் திட்டமிட்டு முடித்தார். படம் முழுக்க வீல் சேரிலேயே உட்கார்ந்திருக்கும் பிரதான கதாபாத்திரத்தில் டாப்ஸி நடித்துள்ளார். நீண்ட நாட்கள் கழித்து தமிழில் அவர் நடித்துள்ள படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் உருவான இப்படம், இந்தியிலும் வெளியாகவுள்ளது. பிரபல இயக்குநர் அனுராக் கஷ்யாப் தனது தயாரிப்பு நிறுவனம் இப்படத்தை வெளியிடுவது குறிப்பிடத்தக்கது. முன்பாக அனுராக் காஷ்யப் இயக்கத்தில் வெளியான 'மன்மர்ஷியான்' படத்தில் டாப்ஸி தான் நாயகியாக நடித்திருந்தார்.

'கேம் ஓவர்' படத்தில் அனுராக் காஷ்யப் இணைந்திருப்பதால், இப்படம் உலக அளவில் கவனம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close