[X] Close

ஹாலிவுட் ஜன்னல்: அலாதினும் புதிய பூதமும்


  • kamadenu
  • Posted: 10 May, 2019 11:06 am
  • அ+ அ-

-எஸ்.சுமன்

டிஸ்னி நிறுவனம் 27 ஆண்டுகளுக்கு முந்தைய தனது அனிமேஷன் படைப்பைத் தற்போதைய தொழில்நுட்பங்களுடன் ‘ரீமேக்’ செய்திருக்கிறது. அந்தப் படம், ‘அலாதின்’.

‘அலாவுதீனும் அற்புத விளக்கும்’ என்று அனைவரும் அறிந்த கதையைத் தழுவி 1992-ல் அனிமேஷன் திரைப்படமாக டிஸ்னி தயாரித்து வெளியிட்டது. இந்தப் படம் புதிய பாக்ஸ் ஆபீஸ் சாதனையைப் படைத்தது.

 கூடுதலாக ‘வீடியோ டேப்’ விற்பனையிலும் ஹிட் அடித்தது. தொடர்ந்து பல திரைப்படங்களாகவும், தொலைக்காட்சித் தொடர்களாகவும் அலாதின் உருவெடுத்தபோதும் 1992 வெற்றி வாய்க்கவில்லை. எனவே, பழைய அனிமேஷன் ’அற்புத விளக்கை’ லைவ் ஆக்‌ஷன் தொழில்நுட்பத்தில் புதிதாய்த் தேய்த்திருக்கிறது டிஸ்னி.

அலாதின் கதையில் வரும் பூதம் வெகு பிரபலம். ‘1992 அலாதின்’ அனிமேஷன் பூதத்துக்கு ராபின் வில்லியம்ஸ் கொடுத்த குரல் வரவேற்புப் பெற்றிருந்தது. தற்போது புதிய பூதமாக சிஜிஐ சேட்டைகளுடன் வில் ஸ்மித் தோன்றுகிறார்.

அலாதினாக மெனா மௌசத், சுல்தான் மகளாக நவோமி ஸ்காட் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அனிமேஷன் பங்களிப்புக்காக ஆஸ்கர் வென்ற ஆலன் மென்கன் இதிலும் இசையமைத்துள்ளார். கய் ரிட்சி இயக்கி உள்ளார்.

அலாதின் படங்களின் தவிர்க்க முடியாத அம்சமாக அதன் மரபான பின்னணி சேர்ந்திருக்கும். தற்போது நவீன தலைமுறைக்கு ஏற்ற திரைக்கதையில் அந்தப் பழைய பின்னணியைக் குறைத்துள்ளார்கள். அலாதின், பூதத்தின் சாகசங்களைப் பிரம்மாண்டமாக எடுத்துள்ளனர். முதல் படத்தைப் போலவே இசை, பாடலுக்கும் முக்கியத்துவம் தந்துள்ளனர்.

3டி மற்றும் ஐமேக்ஸ் பதிப்புகளிலும் வரும் புதிய ‘அலாதின்’ திரைப்படம் இந்தியா உள்படப் பல்வேறு நாடுகளில் மே 24 அன்று வெளியாகிறது.

அலாதின் திரை முன்னோட்டத்தைக் காண இணையச் சுட்டி: http://bit.ly/2H6suos

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close