[X] Close

‘பிக் பாஸ் 3’-ல் கலந்து கொள்கிறேனா? - சாந்தினி பதில்


3

  • kamadenu
  • Posted: 09 May, 2019 16:30 pm
  • அ+ அ-

‘பிக் பாஸ் 3’ நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக வெளியான செய்திக்குப் பதில் அளித்துள்ளார் சாந்தினி தமிழரசன்.

கே.பாக்யராஜ் இயக்கிய ‘சித்து +2’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சாந்தினி தமிழரசன். சில தெலுங்குப் படங்களிலும் நடித்துள்ள சாந்தினி, தற்போது தமிழ்ப் படங்களில் மட்டுமே கவனம் செலுத்து வருகிறார். தற்போது அவர் கைவசம் ஆறேழு படங்கள் உள்ளன.

இந்நிலையில், அடுத்த மாதம் (ஜூன்) ஒளிபரப்பாகவுள்ள ‘பிக் பாஸ் 3’ நிகழ்ச்சியில் சாந்தினி கலந்து கொள்கிறார் எனத் தகவல் வெளியானது. இதனால், ‘பிக் பாஸ்’ ரசிகர்கள் ஆர்வமானார்கள். நிகழ்ச்சி தொடங்க ஒரு மாதத்துக்கு மேல் இருக்கும்போது, முதன்முதலாக சாந்தினியின் பெயர் வெளியானதும் ரசிகர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.

இந்தத் தகவல் உண்மையா? எனத் தெரிந்து கொள்வதற்காக சாந்தினியிடம் பேசினேன். “தற்போதுதான் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. கலந்து கொள்ளலாமா? வேண்டாமா? என நான் இன்னும் முடிவு செய்யவில்லை. கையில் இருக்கும் படங்களை சொன்ன தேதியில் முடித்துக் கொடுத்தாக வேண்டும். எனவே, இப்போதைக்கு இந்தச் செய்தியில் உண்மையில்லை” என்றார்.

‘பிக் பாஸ்’ ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த மூன்றாவது சீஸன் விரைவில் தொடங்கவுள்ளது. முதல் இரண்டு சீஸன்களைத் தொகுத்து வழங்கிய கமல்ஹாசனே இம்முறையும் தொகுத்து வழங்குகிறார். இதற்கான ப்ரமோ, சமீபத்தில் படமாக்கப்பட்டது.

‘பிக் பாஸ்’ முதல் சீஸனில் ஆரவ், இரண்டாவது சீஸனில் ரித்விகா இருவரும் வெற்றியாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close