[X] Close

‘அங்காடித்தெரு’வை மிஞ்சுற மாதிரி இன்னும் ஒரு கேரக்டர் அமையவில்லை: ஏ.வெங்கடேஷ் நெகிழ்ச்சி


  • kamadenu
  • Posted: 09 May, 2019 15:29 pm
  • அ+ அ-

வசந்தபாலன் இயக்கத்தில் 2010-ம் ஆண்டு வெளியான படம் ‘அங்காடித்தெரு’. மகேஷ் - அஞ்சலி முன்னணிக் கதாபாத்திரங்களில் நடித்த இந்தப் படத்தில், இயக்குநர் ஏ.வெங்கடேஷ், ப்ளாக் பாண்டி, ஜான் விஜய், பழ.கருப்பையா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்தனர்.

4 பாடல்களுக்கு ஜீ.வி.பிரகாஷ் இசையமைக்க, விஜய் ஆண்டனி 2 பாடல்கள் மற்றும் பின்னணி இசையை அமைத்தார். தி.நகர், ரங்கநாதன் தெருவில் உள்ள துணிக்கடைகளில் வேலை செய்பவர்களைப் பற்றி இந்தப் படம் எடுக்கப்பட்டது.

இந்தப் படம் எல்லோராலும் கொண்டாடப்பட்டது. நாயகியாக நடித்த அஞ்சலிக்கு இந்தப் படத்தின் மூலம் பரவலாகக் கவனம் பெற்றார். சிறந்த படத்துக்கான தமிழக அரசின் சிறப்பு விருது இந்தப் படத்துக்கு வழங்கப்பட்டது.

கடந்த மார்ச் 26-ம் தேதியுடன் இந்தப் படம் வெளியாகி 9 வருடங்கள் ஆகின்றன. எனவே, ட்விட்டரில் அதைக் குறிப்பிட்டு, படக்குழுவினருக்கு வாழ்த்துகள் தெரிவித்தார் ஒருவர். அந்த ட்வீட்டுக்கு, தற்போது பதிலளித்துள்ளார் ஏ.வெங்கடேஷ்.

“யப்பா... ஒன்பது வருடங்கள் ஓடிவிட்டன. இதற்குப் பிறகு பல படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்தேன். ஆனாலும், ‘அங்காடித்தெருவை’ மிஞ்சுற மாதிரி இன்னும் ஒரு கேரக்டர் அமையவில்லை. நன்றி வசந்தபாலன்” எனத் தெரிவித்துள்ளார் ஏ.வெங்கடேஷ்.

வசந்தபாலன் தற்போது ஜீ.வி.பிரகாஷை வைத்து ‘ஜெயில்’ என்ற படத்தை இயக்கியுள்ளார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close