[X] Close

விக்ரம் - அஜய் ஞானமுத்து படம்: செப்டம்பரில் படப்பிடிப்பு தொடக்கம்


  • kamadenu
  • Posted: 09 May, 2019 15:00 pm
  • அ+ அ-

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படத்தின் ஷூட்டிங், செப்டம்பரில் தொடங்குகிறது.

விக்ரம் நடிப்பில் ரிலீஸுக்குத் தயாராகிவரும் படம் ‘கடாரம் கொண்டான்’. ‘தூங்காவனம்’ படத்தை இயக்கிய ராஜேஷ் எம் செல்வா, இந்தப் படத்தை இயக்கியுள்ளார். கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரித்துவரும் இந்தப் படத்தை, ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது. ஜிப்ரான் இசையமைக்கிறார்.

விக்ரமுடன் இணைந்து அக்‌ஷரா ஹாசன், அபு ஹாசன் ஆகியோர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ‘சாமி ஸ்கொயர்’ படம் போலவே இதிலும் ஒரு பாடலைப் பாடியுள்ளார் விக்ரம்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து, ‘இமைக்கா நொடிகள்’ அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிக்கிறார் விக்ரம். செப்டம்பர் மாதம் முதல் இதன் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. ‘இமைக்கா நொடிகள்’ படத்தைப் போலவே இதுவும் க்ரைம் த்ரில்லராக உருவாக இருக்கிறது. அதேபோல், இதிலும் பாலிவுட் நடிகர் ஒருவர் வில்லனாக நடிக்கவுள்ளார்.

கெளதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்துவந்த ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு இன்னும் முடிவடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close