[X] Close

மே 17-ம் தேதி வெளியீடு: 'Mr.லோக்கல்' படக்குழு உறுதி


17-mr

  • kamadenu
  • Posted: 09 May, 2019 12:00 pm
  • அ+ அ-

-ஸ்கிரீனன்

மே 17-ம் தேதி வெளியீட்டில் எந்தவொரு பின்வாங்கலுமே இல்லை என்று 'Mr.லோக்கல்' படக்குழு உறுதி தெரிவித்தது.

ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'Mr.லோக்கல்'. ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் நயன்தாரா, ராதிகா சரத்குமார், சதீஷ், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் முடிந்து தணிக்கைக்கு விண்ணப்பித்துள்ளனர். ஆனால், மே 17-ம் தேதி வெளியீடு என்பது, சமீபத்திய சில விளம்பரங்களில் படக்குழு தெரியப்படுத்தவில்லை. இதனால், மே 17-ம் தேதி வெளியீடு இருக்காது என்று தகவல் பரவியது.

உடனடியாக இன்று (மே 9) காலை முதலே, தங்களுடைய விளம்பரங்களில் மே 17-ம் தேதி வெளியீடு என்று தெரிவித்து, வெளியீட்டை உறுதிப்படுத்திக் கொண்டது படக்குழு. தணிக்கைப் பணிகள் இன்று (மே 9) முடிவடைந்தவுடன் விளம்பரப்படுத்தும் பணிகளை துரிதப்படுத்த படக்குழு முடிவு செய்துள்ளது.

'Mr.லோக்கல்' படத்தின் பணிகளை முடித்துவிட்டு, மித்ரன் இயக்கி வரும் 'ஹீரோ' மற்றும் பாண்டிராஜ் இயக்கி வரும் படம் ஆகியவற்றில் கவனம் செலுத்தி வருகிறார் சிவகார்த்திகேயன்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close