[X] Close

முதன்முறையாக இரட்டை வேடங்களில் விஜய் சேதுபதி


  • kamadenu
  • Posted: 09 May, 2019 11:37 am
  • அ+ அ-

-ஸ்கிரீனன்

'சங்கத்தமிழன்' படத்தில் முதன்முறையாக இரட்டை வேடங்களில் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி

விஜய் சந்தர் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'சங்கத்தமிழன்'. விஜய் சேதுபதி நடித்து வரும் இப்படத்தில் ராஷி கண்ணா, நிவேதா பெத்துராஜ், சூரி, நாசர், ஜான் விஜய் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இப்படத்தை விஜயா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

ஹைதராபாத், சென்னையில் முதற்கட்டப் படப்பிடிப்பை முடித்துவிட்டு, இரண்டாம் கட்டப் படப்பிடிப்புக்குத் தயாராகி வருகிறது படக்குழு. இந்நிலையில், முதன்முறையாக் இதில் இரட்டை வேடங்களில் விஜய் சேதுபதி நடிக்கிறார் என்று தகவல் வெளியானது.

இது குறித்து விசாரித்த போது, இத்தகவலை உறுதிப்படுத்தியது படக்குழு. இதுவரை மீசை வைத்த விஜய் சேதுபதியின் கதாபாத்திரப் படப்பிடிப்பு முடிவடைந்தது. அடுத்தகட்டப் படப்பிடிப்பு மதுரை, தேனி, கம்பம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறவுள்ளது.

இதில் விஜய் சேதுபதியின் மற்றொரு கதாபாத்திரத்துக்கான காட்சிகளைப் படமாக்கவுள்ளனர். மீசையுள்ள கதாபாத்திரத்துக்கு  ராஷி கண்ணாவும், மற்றொரு கதாபாத்திரத்துக்கு நிவேதா பெத்துராஜும் நாயகிகளாக நடித்துள்ளனர். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, விவேக் - மெர்வின் இசையமைக்கின்றனர்.

இதன் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை சன் டிவியும், ஆடியோ உரிமையை சோனி நிறுவனமும் கைப்பற்றியுள்ளன.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close