[X] Close

‘சூர்யா 39’ அப்டேட்: ‘விஸ்வாசம்’ டீமுடன் களமிறங்கும் சிவா


39

  • kamadenu
  • Posted: 08 May, 2019 18:41 pm
  • அ+ அ-

‘விஸ்வாசம்’ படத்தில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்களே ‘சூர்யா 39’ படத்திலும் பணியாற்ற இருக்கின்றனர்.

சூர்யா நடிப்பில் வருகிற 31-ம் தேதி ரிலீஸாகும் படம் ‘என்.ஜி.கே’. செல்வராகவன் இயக்கியுள்ள இந்தப் படத்தில், ரகுல் ப்ரீத் சிங் மற்றும் சாய் பல்லவி இருவரும் ஹீரோயின்களாக நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ‘காப்பான்’ படத்தில் நடித்துள்ளார் சூர்யா. சயிஷா ஹீரோயினாக நடித்துள்ள இந்தப் படத்தில், மோகன்லால், பொமன் இரானி, ஆர்யா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் ‘சூரரைப் போற்று’ படத்தில் நடிக்கிறார் சூர்யா. அபர்ணா பாலமுரளி ஹீரோயினாக நடிக்கும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக், தமிழ்ப் புத்தாண்டுக்கு வெளியானது. இதைத் தொடர்ந்து சிவா இயக்கத்தில் நடிக்கிறார் சூர்யா.

‘விஸ்வாசம்’ படத்தில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்களே, இந்தப் படத்திலும் பணியாற்ற இருக்கின்றனர். பெரும்பாலும், தொடர்ந்து அவர்களைத்தான் பயன்படுத்தி வருகிறார் சிவா. ஆனால், ‘விஸ்வாசம்’ படத்தில்தான் சிவா - டி.இமான் கூட்டணி ஏற்பட்டது.

தற்போது ‘சூர்யா 39’ படத்திலும் இந்தக் கூட்டணி இணைவது உறுதியாகிவிட்டது. இதன்மூலம் முதன்முறையாக சூர்யா படத்துக்கு இசையமைக்கிறார் டி.இமான். இந்தப் படம், முழுக்க முழுக்க நகரத்தை மையப்படுத்தி எடுக்கப்பட இருக்கிறது. ஸ்டுடியோ க்ரீன் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close