[X] Close

நான் ரொம்பப் பாவமானவன்; இது பாதி பேருக்குத் தெரியாது: எஸ்.ஜே.சூர்யா


  • kamadenu
  • Posted: 08 May, 2019 13:57 pm
  • அ+ அ-

-ஸ்கிரீனன்

நான் ரொம்பப் பாவமானவன்; இது பாதி பேருக்குத் தெரியாது என 'மான்ஸ்டர்' இசை வெளியீட்டு விழாவில் பேசினார் எஸ்.ஜே.சூர்யா.

நெல்சன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, ப்ரியா பவானி சங்கர், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மான்ஸ்டர்'. ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ள இப்படத்தை, எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ளார்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று (மே 8) நடைபெற்றது. இதில் ஒட்டுமொத்த படக்குழுவினரும் கலந்து கொண்டனர். இவ்விழாவில் எஸ்.ஜே.சூர்யா பேசியதாவது:

இயக்குநர் நெல்சன் வந்து 'நீங்களும் ஒரு எலியும்' என்று கதை சொன்னார். 'என்னங்க... பல புலிகளுக்கு எல்லாம் வில்லனா நடிச்சாச்சு... எனக்கு எலியா?' என்று கேட்டேன். இப்படம் ஒரு நல்ல அனுபவம். நல்ல ஜாலியான ஒரு படத்துக்கு, ஜாலியாகப் பணிபுரிந்தோம். இயக்குநர் நெல்சன் ஒரு உண்மையான ஆள் என்று முதலில் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு சொன்னார். அதை நான் படப்பிடிப்பில் தினமும் பார்த்தேன்.

குழந்தைகளுக்கு நாய், பூனை, எலி ஆகியவற்றுடன் ஒரு பந்தம் இருக்கும். வீட்டில் அன்பாக வளர்ந்த நாய் இறந்துவிட்டால், குழந்தைகள் சாப்பிட மாட்டார்கள். அந்தளவுக்கு ஒரு பந்தமாக வளர்ந்திருப்பார்கள். எனது காட்சிகளுக்கான படப்பிடிப்பை முடித்துவிட்டு, சுமார் 15 நாட்கள் வரை நிஜ எலியை வைத்து ஷுட் பண்ணினார்கள். நான் கூட கிராபிக்ஸில் பண்ணுடுங்க என்றேன். இயக்குநரோ 'இல்லை சார். நிஜ எலியை வைத்துப் பண்ணலாம்' என்று அடம்பிடித்தார்.

'முன்னாபாய் எம்.பி.பி.எஸ்' படத்தில் நடித்து வித்யாபாலன் பெரிய நடிகையாக வளர்ந்தார். அந்த மாதிரியான வாய்ப்பு ப்ரியா பவானி சங்கருக்கும் கிடைக்கும். முதல்முறை நடந்த ஷுட்டிங்கில் எலியின் முகபாவனைகள் மேட்ச் ஆகவில்லை என்று மறுபடியும் ஷுட் பண்ணிய கூத்து எல்லாம் நடந்தது.

அனைத்துமே நகர்ந்து கொள்வது மாதிரியான வீடு ஒன்றை செட் போட்டு, அதில் 50 நாட்கள் ஷுட் பண்ணினார்கள். பிறகு எலியை மட்டும் வைத்து 20 நாட்கள் ஷுட் பண்ணினார்கள். இப்படத்தில் பணிபுரிந்த அனைவருமே ரொம்ப சிம்பிளாக மேஜிக் பண்ணக்கூடியவர்கள்.  நடிக்கணும், ஆனால் நடிப்பு வெளியே தெரியக்கூடாது என்று சொல்லிச் சொல்லி நெல்சன் வேலை வாங்கினார். காது நடிக்க வேண்டும் என ஒருமுறை சொன்னார்.

'நியூ' படம் எடுத்தவன், எப்போதுமே ஜாலியாக இருப்பான் எஸ்.ஜே.சூர்யா என நினைத்துவிட்டார்கள். ஆனால், நான் ரொம்பப் பாவமானவன். இது பாதி பேருக்குத் தெரியாது. என்னோட ரியலான முகத்தை 'மான்ஸ்டர்' படத்தில் எடுத்துக்காட்டிய இயக்குநர் நெல்சனுக்கு நன்றி.

இடையில் படங்கள் கொஞ்சம் வெளியாகாமல் தடைபட்டுக் கொண்டே இருந்தது. அப்போது அமிதாப் சாருடன் இந்தியில் ஒரு படம் நடிச்சுட்டு இருந்தேன். அதில், ஒரு ஷாட்டில் எனக்கு வெற்றித் திலகம் வைத்துவிட்டார். அந்தக் காட்சி எடுக்கப்பட்ட அன்றுதான் நெல்சன் எனக்குத் தொலைபேசியில் 'மான்ஸ்டர்' ரிலீஸ் தேதியைச் சொன்னார்.

மிகப்பெரிய வியாபாரம் கொண்ட ஹீரோவாக வேண்டும் என்று போராடிக் கொண்டிருக்கிறேன். கண்டிப்பாக இந்த எலி அதற்கு முதற்படி எடுத்து வைக்கும் என நம்புகிறேன். இந்த உலகத்துக்கு நான் ஹீரோவா என்று தெரியாது. ஆனால், எனக்கு நான் ஹீரோவாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன். அதை விரைவில் உலகமும் நம்பி வரவேற்கும்.

இவ்வாறு எஸ்.ஜே.சூர்யா பேசினார்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close