[X] Close

விஜய் சேதுபதியின் ‘சங்கத்தமிழன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு


  • kamadenu
  • Posted: 07 May, 2019 18:12 pm
  • அ+ அ-

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகிவரும் ‘சங்கத் தமிழன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.

‘வாலு’, ‘ஸ்கெட்ச்’ படங்களைத் தொடர்ந்து விஜய் சந்தர் இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘சங்கத்தமிழன்’. விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தில், நிவேதா பெத்துராஜ் மற்றும் ராஷி கண்ணா இருவரும் நாயகிகளாக நடிக்கின்றனர்.

சூரி, நாசர், ஜான் விஜய் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, விவேக் - மெர்வின் இசையமைக்கின்றனர். விஜயா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.

இதன் படப்பிடிப்பு கடந்த மார்ச் 4-ம் தேதி ஹைதராபாத்தில் தொடங்கியது. முதல் ஷெட்யூலை அங்கு முடித்துவிட்டு, இரண்டாவது ஷெட்யூல் சென்னையில் படமாக்கப்பட்டது.

இந்நிலையில், ‘சங்கத்தமிழன்’ ஃபர்ஸ்ட் லுக் இன்று (மே 7) வெளியாகியுள்ளது. இதன் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை சன் டிவியும், ஆடியோ உரிமையை சோனி நிறுவனமும் கைப்பற்றியுள்ளன.

அடுத்தகட்ட படப்பிடிப்பு மதுரை, கம்பம், தேனி ஆகிய பகுதிகளில் நடைபெற இருக்கிறது. இன்னும் 40 நாட்கள் படப்பிடிப்பு பாக்கியுள்ளது என படக்குழு தெரிவித்துள்ளது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close