[X] Close

பிரியங்கா சோப்ராவின் ஸ்டைலை யோகி பாபுவுடன் ஒப்பிட்டு கிண்டல்


  • kamadenu
  • Posted: 07 May, 2019 16:08 pm
  • அ+ அ-

நியூயார்க்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரியங்கா சோப்ராவின் ஸ்டைலை, யோகி பாபுவுடன் ஒப்பிட்டு மீம் உருவாக்கியுள்ளனர்.

மெட்ரோபாலிடன் கலை அருங்காட்சியகத்துக்குச் சொந்தமாக நியூயார்க்கில் இயங்கும் கல்வி நிறுவனத்துக்கு நிதி திரட்டும் நிகழ்ச்சி ‘மெட் கலா’. பெரிய நட்சத்திரங்கள் மட்டும் பங்கேற்கும் நிகழ்ச்சி இது. இதற்கான அழைப்பிதழ் வந்தால் மட்டுமெ கலந்துகொள்ள முடியும்.

2019-ம் ஆண்டுக்கான ‘மெட் கலா’, நியூயார்க் நகரில் நடைபெற்றது. இதில் நிக் ஜோன்ஸ், தனது மனைவி பிரியங்கா சோப்ராவுடன் கலந்து கொண்டார். இந்தியாவிலிருந்து இவர்கள் இருவரைத் தவிர தீபிகா படுகோனும் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் பிரியங்கா சோப்ரா அணிந்திருந்த உடை, அவரது ஹேர் ஸ்டைல் மற்றும் மேக்கப் ஆகியவை கிண்டலுக்கு ஆளாகியுள்ளன. சமூக வலைதளங்களில் பலரும் இதை விமர்சித்து வருகின்றனர்.

பிரியங்காவின் புகைப்படத்தை யோகி பாபுவின் புகைப்படத்துடன் ஒப்பிட்டு யாரோ ஒருவர் மீம் ஒன்றை உருவாக்கியுள்ளார். அந்த மீம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. யோகி பாபுவும் அந்த மீமை தன்னுடைய ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close