[X] Close

மே 10-ம் தேதி வெளியீடு: மே 7-ம் தேதி தணிக்கைக்கு விண்ணப்பித்துள்ள 'அயோக்யா' - சிக்கலின்றி வெளியாகுமா?


10-7

  • kamadenu
  • Posted: 07 May, 2019 13:49 pm
  • அ+ அ-

-ஸ்கிரீனன்

மே 10-ம் தேதி வெளியீடு என அறிவித்து, தற்போதுதான் தணிக்கைக்கே விண்ணப்பித்துள்ளது 'அயோக்யா' படக்குழு.

வெங்கட் மோகன் இயக்கத்தில் விஷால், ராஷி கண்ணா, பார்த்திபன், கே.எஸ்.ரவிகுமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'அயோக்யா'. நீண்ட நாட்களாக இப்படம் தயாரிப்பில் இருக்கிறது. ஏப்ரல் வெளியீடு என்று அறிவிக்கப்பட்டு, பின்னர் மே 10-ம் தேதி வெளியீடு என்று மாற்றியமைக்கப்பட்டது.

மே 10-ம் தேதி வெளியீடு என்றால், முன்பே படத்தை தணிக்கை செய்துவிடுவார்கள். ஆனால், 'அயோக்யா' படக்குழுவோ நேற்று (மே 6) தான் இறுதிக்கட்டப் பணிகளை முடித்து, இன்று (மே 7) தணிக்கைக்கு விண்ணப்பித்துள்ளது. எப்போதுமே வரிசைப்படிதான் படங்களைப் பார்த்து தணிக்கை செய்வோம் என்பது தணிக்கை அதிகாரிகளின் விதிமுறையாக இருக்கிறது.

இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், சிக்கலின்றி தணிக்கை முடியுமா என்ற ஆவலுடன் படக்குழு இருக்கிறது. 'அயோக்யா'  படத்தில் தனது பணிகளை முடித்துவிட்டு, விஷால் தனது ட்விட்டர் பதிவில் “அயோக்யா படத்தில் எனது வேலைகள் அனைத்தும் முடிந்தன. நமது சமுதாயத்தை உலுக்கிய பல சம்பவங்கள் மீது எனக்கிருக்கும் கோபத்தைக் காட்ட வாய்ப்பளித்த மோகனுக்கு நன்றி. இனிமே எவனாவது ஒரு பொண்ணை நாசம் பண்ணனும்னு நினைச்சா தூக்கு தண்டனைதான்னு பயப்படணும்” என்று தெரிவித்துள்ளார் விஷால்.

தாமதத்திற்கு காரணம் என்ன?

’அயோக்யா’ படப்பிடிப்பு பணிகளை முடித்துவிட்டு, சுந்தர்.சி படத்தின் படப்பிடிப்புக்காக ஜார்ஜியா நாட்டுக்குப் பயணப்பட்டார் விஷால். அங்கு படப்பிடிப்பை முடித்துவிட்டு சில நாட்களுக்கு முன்புதான் சென்னை திரும்பினார். அதன்பிறகே 'அயோக்யா' படத்துக்கான டப்பிங்கை முடித்துக் கொடுத்துள்ளார். இதுவே தாமதத்திற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close