[X] Close

சிவகார்த்திகேயனுடன் இணையும் சூரி - யோகி பாபு கூட்டணி


  • kamadenu
  • Posted: 07 May, 2019 12:20 pm
  • அ+ அ-

-ஸ்கிரீனன்

பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள புதிய படத்தில் சூரி - யோகி பாபு நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'Mr.லோக்கல்' திரைப்படம் மே 17-ம் தேதி வெளியாகவுள்ளது. அதனைத் தொடர்ந்து மித்ரன் இயக்கத்தில் உருவாகி வரும் 'ஹீரோ' மற்றும் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ஆகியவற்றில் கவனம் செலுத்தி வருகிறார் சிவகார்த்திகேயன்.

தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ள படத்துக்கும் தேதிகள் ஒதுக்கியுள்ளார்.இதன் படப்பிடிப்பு மே 8-ம் தேதி முதல் சென்னையில் தொடங்குகிறது. நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, இமான் இசையமைப்பாளராகப் பணிபுரியவுள்ளார்.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ள இப்படத்தில் சூரி, யோகி பாபு ஆகியோர் சிவகார்த்திகேயனுடன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளது. இப்படத்தின் நாயகியாக அனு இம்மானுவேல் நடிக்கிறார். ஐஸ்வர்யா ராஜேஷ், பாரதிராஜா உள்ளிட்ட பலரும் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

பாண்டிராஜ் படத்தைத் தொடர்ந்து, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் சிவகார்த்திகேயன். லைகா நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கவுள்ளது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close