[X] Close

சிவகார்த்திகேயனுக்கு நாயகியாக அனு இம்மானுவேல் ஒப்பந்தம்


  • kamadenu
  • Posted: 06 May, 2019 18:48 pm
  • அ+ அ-

-ஸ்கிரீனன்

பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள புதிய படத்தில், அனு இம்மானுவேல் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'Mr.லோக்கல்' திரைப்படம் மே 17-ம் தேதி வெளியாகவுள்ளது. அதனைத் தொடர்ந்து மித்ரன் இயக்கத்தில் உருவாகிவரும் 'ஹீரோ' மற்றும் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகிவரும் படம் ஆகியவற்றில் கவனம் செலுத்தி வருகிறார் சிவகார்த்திகேயன்.

தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ள படத்துக்கும் தேதிகள் ஒதுக்கியுள்ளார் சிவகார்த்திகேயன். இதன் படப்பிடிப்பு மே 8-ம் தேதி முதல் சென்னையில் தொடங்குகிறது. நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, டி.இமான் இசையமைப்பாளராகப் பணிபுரியவுள்ளார்.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ள இப்படத்தின் நாயகி யார் என்பது முடிவாகாமல் இருந்தது. பல்வேறு முன்னணி நாயகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது படக்குழு. இறுதியாக அனு இம்மானுவேலை ஒப்பந்தம் செய்துள்ளது படக்குழு.

தமிழில் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான 'துப்பறிவாளன்' படத்தில் விஷாலுடன் நடித்தவர் அனு இம்மானுவேல். அதனைத் தொடர்ந்து அவர் ஒப்பந்தமாகியுள்ள 2-வது படம் இதுவாகும்.

பாண்டிராஜ் படத்தைத் தொடர்ந்து, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் சிவகார்த்திகேயன். லைகா நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கவுள்ளது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close