[X] Close

லீக்கானதா 'மாநாடு' பாடல்? - யுவன் பதில்


  • kamadenu
  • Posted: 06 May, 2019 18:13 pm
  • அ+ அ-

-ஸ்கிரீனன்

இணையத்தில் உலவிவரும் பாடல், 'மாநாடு' படத்தின் பாடல் அல்ல என்று இசையமைப்பாளர் யுவன் தெரிவித்துள்ளார்.

'வந்தா ராஜாவாதான் வருவேன்' படத்துக்குப் பிறகு வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகும் படத்துக்குத் தேதிகளை ஒதுக்கியுள்ளார் சிம்பு. சுரேஷ் காமாட்சி தயாரிக்கவுள்ள இப்படத்துக்கு 'மாநாடு' என்று தலைப்பிடப்பட்டு, முதற்கட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

இம்மாத இறுதியில் தொடங்கவுள்ள இப்படத்தின் நாயகியாக கல்யாணி ப்ரியதர்ஷன் நடிக்கவுள்ளார். எடிட்டராக ப்ரவீன் கே.எல், இசையமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜா பணிபுரியவுள்ளனர். தற்போது படப்பிடிப்புக்கான இடங்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நேற்றிரவு (மே 5) முதல் இணையத்தில் சிம்பு பாடியுள்ள "அதுனாலதான் நான் உனக்கு வேண்டாம்டி... அதுனாலதான் கெஞ்சிக் கெஞ்சி கேட்கிறேன் ப்ளீஸ் ஸே நோ டூ மி" என்ற பாடல் உலவி வருகிறது. 3:23 நிமிடங்கள் ஒலிக்கக்கூடிய அப்பாடல் 'மாநாடு' படத்துக்காக யுவன் உருவாக்கிய பாடல், எப்படி வெளியானது எனத் தெரியவில்லை என்ற தகவலும் வெளியானது.

படப்பிடிப்பு தொடங்குவதற்குள்ளேயே பாடல் வெளியாகிவிட்டதே என்று சிம்பு ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியடைந்தனர். தற்போது, “இந்த டியூன் என்னுடையது அல்ல. மேலும், இச்செய்தியும் உண்மையில்லை” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் யுவன்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close