[X] Close

கொண்டாட்டத்துடன் நடைபெற்ற எமி ஜாக்சன் திருமண நிச்சயதார்த்தம்


  • kamadenu
  • Posted: 06 May, 2019 18:00 pm
  • அ+ அ-

நடிகை எமி ஜாக்சனின் திருமண நிச்சயதார்த்தம், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் இன்று (மே 6) நடைபெற்றது.

‘மதராசப்பட்டினம்’ படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானவர் எமி ஜாக்சன். லண்டனைச் சேர்ந்த இவர் ‘தாண்டவம்’, ‘ஐ’, ‘தங்க மகன்’, ‘கெத்து’, ‘தெறி’, ‘தேவி’ ஆகிய தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார். மேலும், சமீபத்தில் ரிலீஸான ‘2.0’ படத்தில் ரோபோ கதாபாத்திரத்தில் நடித்தார்.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்திப் படங்களிலும் நடித்துள்ள எமி ஜாக்சன் ‘போகி மேன்’ என்ற ஆங்கிலப் படத்திலும் நடித்துள்ளார். மேலும், ‘சூப்பர் கேர்ள்’ என்ற டிவி சீரியலிலும் நடித்துள்ளார்.

கடந்த புத்தாண்டு தினத்தில், தன்னுடைய காதலருடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார் எமி ஜாக்சன். எமியின் காதலர் ஜார்ஜ், லண்டனில் தொழிலதிபராக இருக்கிறார். இருவருக்கும் திருமணம் நிச்சயமாகி விட்டது என்றும், விரைவில் திருமணம் என்றும் செய்திகள் வெளியாகின.

சமீபத்தில், தான் கர்ப்பமாக இருப்பதாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் எமி ஜாக்சன். “இந்த விஷயத்தைக் கூரையிலிருந்து கத்திச் சொல்லவேண்டும் என காத்துக் கொண்டிருந்தேன். இன்று அன்னையர் தினம் என்பதால், இதைவிட சிறந்த தருணம் இருக்க முடியாது. இந்த உலகத்தில் எதைவிடவும் உன்னை மிக அதிகமாக நான் நேசிக்கிறேன். உண்மையான, தூய்மையான அன்பு. நாம் நமது குட்டி லிப்ராவைச் சந்திக்கப் பொறுமையின்றிக் காத்திருக்கிறோம்” எனப் பதிவிட்டுள்ளார் எமி ஜாக்சன்.

இந்நிலையில், இன்று (மே 6) தனக்கும், தன்னுடைய காதலருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக புகைப்படத்துடன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் எமி ஜாக்சன்.

“இன்று எங்களுடைய நிச்சயதார்த்தத்தைக் கொண்டாடுகிறோம். இது எங்களுடைய வாழ்க்கையில் மிகவும் மறக்க முடியாத நாள். இந்த நாளை இன்னும் சிறப்பாக்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு நன்றி” எனத் தெரிவித்துள்ளார் எமி ஜாக்சன்.

amy jackson.jpg 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close