[X] Close

நல்லவற்றைப் பாராட்டாமல்தான் நிறைய பேர் தொலைந்து போயுள்ளனர்: இயக்குநர் சேரன்


  • kamadenu
  • Posted: 06 May, 2019 16:28 pm
  • அ+ அ-

நல்லவற்றைப் பாராட்டாமல்தான் நம்மில் நிறைய பேர் தொலைந்து போயுள்ளனர் என இயக்குநர் சேரன் தெரிவித்துள்ளார்.

விவேக் நடிப்பில் கடந்த ஏப்ரல் 19-ம் தேதி ரிலீஸான படம் ‘வெள்ளைப் பூக்கள்’. க்ரைம் த்ரில்லர் படமான இதை விவேக் இளங்கோவன் இயக்கினார். விமர்சகர்கள், சினிமா ரசிகர்கள் எனப் பெருவாரியான மக்களுக்கு இந்தப் படம் பிடித்திருந்தது.

மாதவன், சசிகுமார், கார்த்திக் சுப்பராஜ், சேரன் எனப் பலரும் இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு, தங்களுடைய வாழ்த்துகளை விவேக்கிடம் தெரிவித்து வருகின்றனர். அவரும் அவர்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார்.

அதேபோல் இயக்குநர் சேரனுக்கும், “வெள்ளைப் பூக்களை நெஞ்சாரப் பாராட்டிய இயக்குநர் சேரனுக்கு என் உளமார்ந்த நன்றிகள்” என ட்விட்டரில் விவேக் தெரிவித்துள்ளார்.

அதற்குப் பதிலளித்துள்ள சேரன், “இந்த விமர்சனங்களை எல்லாம் நீங்கள் கண்டும் காணாமல் போயிரலாம். ஆனால், அதை மதித்து, அதற்கு தக்க பதில் அளிக்கும் உங்கள் குணம் உயர்ந்தது சார், நன்றி சார்.

திரைப்படமும், உங்களது நடிப்பும், இயக்குநரின் உழைப்பும் அதற்குத் தகுதியானதாக இருந்தது சார். நல்லவற்றைப் பாராட்டாமல்தான் நம்மில் நிறைய பேர் தொலைந்து போயிருக்கிறார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

சேரன் நடிப்பில் ‘ராஜாவுக்கு செக்’ படம் ரிலீஸுக்குத் தயாராகி வருகிறது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close