[X] Close

இதுவரை எந்தப் பிரதமரும் இப்படி அநாகரிகமாகப் பேசியதில்லை: மோடியை சாடிய சித்தார்த்


  • kamadenu
  • Posted: 06 May, 2019 15:20 pm
  • அ+ அ-

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் மறைவு குறித்து தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பிரதமர் மோடிக்கு, நடிகர் சித்தார்த் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "மோடி அவர்களே, ராஜீவ் காந்தியின் வாழ்க்கை இயல்பாக முடியவில்லை.

அது வன்முறையால் முடிக்கப்பட்டது. புல்வாமாவில் நமது வீரர்கள் எப்படிக் கொல்லப்பட்டனரோ, அதேபோல் தான் ராஜீவும் கொல்லப்பட்டார். இதுவரை எந்தப் பிரதமரும் இவ்வளவு கீழ்த்தரமாக நாகரிகமற்றுப் பேசியதில்லை. வேதனையும் வெட்கமும் ஆட்கொள்கிறது" எனப் பதிவிட்டுள்ளார்.

மோடி பேசியது என்ன?

முன்னதாக உத்தரப் பிரதேசத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பிரதமர் மோடி பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது, "ராகுல் காந்தியின் தந்தை நேர்மையானவர், மிஸ்டர் கிளீன் என காங்கிரஸால் சித்தரிக்கப்பட்டவர். ஆனால், கடைசியில் அவரது வாழ்க்கை நம்பர்-1 ஊழல்வாதியாகத்தான் முடிவடைந்தது" எனக் கூறினார்.

அவரது இந்த விமர்சனத்துக்குப் பல்வேறு பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்துவருகின்றனர். அந்த வரிசையில், நடிகர் சித்தார்த்தும் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close