[X] Close

விரைவில் ராஜமெளலி படம்: மகேஷ்பாபு தகவல்


  • kamadenu
  • Posted: 06 May, 2019 14:52 pm
  • அ+ அ-

-ஸ்கிரீனன்

ராஜமெளலி இயக்கத்தில் விரைவில் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக மகேஷ்பாபு தெரிவித்துள்ளார்.

வம்சி இயக்கத்தில் மகேஷ்பாபு, பூஜா ஹெக்டே, அல்லரி நரேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மகரிஷி'. மகேஷ்பாபுவின் 25-வது படம் என்பதால், பெரும் பொருட்செலவில் உருவாக்கியுள்ளனர்.

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ், வைஜெயந்தி மூவிஸ் மற்றும் பிவிபி சினிமாஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்துக்கு, தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார். இப்படத்தை விளம்பரப்படுத்துவதற்காக பத்திரிகையாளர்களை சந்தித்தா மகேஷ்பாபு

அப்போது, "உங்களுடைய அடுத்தடுத்த படங்கள் என்ன?" என்ற கேள்விக்கு, "அனில் ரவிப்புடி உடனான படம் விரைவில் அறிவிக்கப்படும். மேலும், ராஜமெளலி இயக்கத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அதற்கான கதை விவாதங்களும் போய்க் கொண்டிருக்கிறது. அனைத்துமே சரியான நேரத்தில் அறிவிக்கப்படும்" என்று பதிலளித்துள்ளார் மகேஷ்பாபு.

இப்பதில், மகேஷ்பாபு ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் 'ஆர்.ஆர்.ஆர்' படத்தை இயக்கி வருகிறார் ராஜமெளலி. இப்படம் அடுத்த ஆண்டு (2020) ஜூலை 30-ம் தேதி வெளியாகவுள்ளது. ஆகையால், மகேஷ்பாபு - ராஜமெளலி படம் 2020-ம் ஆண்டு இறுதியில் அறிவிக்கப்பட்டு, 2021-ல் படப்பிடிப்பு தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close