[X] Close

இரண்டே வாரத்தில் 2 பில்லியன் டாலர்கள் வசூல்: அவதாரை முந்துமா அவெஞ்சர்ஸ்?


2

  • kamadenu
  • Posted: 06 May, 2019 14:30 pm
  • அ+ அ-

2 பில்லியன் டாலர் வசூலை வெகுவிரைவில் எட்டிய படம் என ‘அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்’ சாதனை படைத்துள்ளது.

கடந்த ஏப்ரல் 26-ம் தேதி வெளியான ‘அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்’ படம், அமெரிக்கா, சீனா, இந்தியா என திரையிடப்பட்ட நாடுகளிலெல்லாம் பழைய வசூல் சாதனைகளை முறியடித்து, புதிய சாதனைகளைப் படைத்து வருகிறது.

தற்போது, 2 பில்லியன் டாலர்களை வெகுவிரைவில் எட்டிய படம் என்ற சாதனையைப் படைத்ததோடு, அதிக வசூல் செய்த படங்கள் பட்டியலில் ‘டைட்டானிக்’கை முந்தி. 2-வது இடத்தைப் பிடித்துள்ளது. . இதற்கு முன், இந்தச் சாதனையை ‘அவதார்’ படம் பெற்றிருந்தது. ஆனால், ‘அவதார்’ படம் இந்த வசூலை எட்ட 47 நாட்கள் ஆயின. ஆனால், ‘அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்’ வெறும் 11 நாட்களில் இதை சாதித்துள்ளது.

மேலும், ‘அவதார்’ படத்தின் ஒட்டுமொத்த வசூல் 2.78 பில்லியன் டாலர்கள். ‘எண்ட்கேம்’ இதுவரை 2.18 பில்லியன் டாலர்களை வசூலித்துள்ளது. இன்னும் படத்தின் ஓட்டம் முடியவில்லை. வசூலும் குறைவதாகத் தெரியவில்லை. எனவே, கண்டிப்பாக ‘அவதார்’ படத்தின் ஒட்டுமொத்த வசூலையும் ‘அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்’ முந்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வளவு ஏன்... 3 பில்லியன் டாலர் வசூலை எட்டி, சரித்தர சாதனை படைக்கும் முதல் படமாகக்கூட ‘எண்ட்கேம்’ இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் 300 கோடி ரூபாய் வசூலைக் கடந்துள்ள ‘அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்’, இங்கு 300 கோடியைத் தாண்டிய முதல் படம் என்ற புதிய சாதனையைப் படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close