[X] Close

‘நீயா’ படத்தின் 3 ஒற்றுமைகள்


3

  • kamadenu
  • Posted: 06 May, 2019 08:17 am
  • அ+ அ-

ஜெய், கேத்தரின் தெரசா, ராய் லட்சுமி, வரலட்சுமி  ஆகியோர் நடிப்பில் விரைவில் வெளிவர உள்ள திரைப்படம் ‘நீயா 2’. தாய்லாந்து தலைநகர் பாங்காக் அருகே உள்ள கோப்ரா வில்லேஜ் என்ற பகுதிகளில் வாழும் பாம்பின் தோற்றத்தை பின்னணியாகக் கொண்டு இதை படமாக்கியுள்ளனர். படம் குறித்து இயக்குநர் எல்.சுரேஷ் கூறியதாவது:

நிஜ பாம்பை பயன்படுத்தி படப்பிடிப்பு நடத்தத்தான் முடிவு செய்தோம். ஆனால், பாங்காக்கில் குறிப்பிட்ட பகுதிகளில் வாழும் பாம்புகளின் உருவம் ஒரு வாரம் வரைதான் ஒரேமாதிரி இருக்கிறது. அதன் பிறகு, தோல் உரிவதும், வளர்வதுமாக இருக்கிறது. எனவே, படப்பிடிப்புக்கு அது சரிவராது என்பதால், கிராஃபிக்ஸ் செய்ய முடிவெடுத்தோம். அதிக பயம் ஏற்பட வேண்டும் என்பதற்காக, கருநாகத்தை தேர்ந்தெடுத்தோம்.

‘நீயா’ முதல் பாகத்துக்கும், இந்த படத்துக்கும் 3 ஒற்றுமைகள் இருக்கின்றன. படத்தின் பெயர், ‘பாம்பு’ மற்றும் ‘ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்’ பாடல் - இந்த மூன்றைத் தவிர, ‘நீயா’ படத்துக்கும் இந்த படத்துக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. ‘நீயா’ படத்தில் பாம்பு ஒவ்வொரு கதாபாத்திரமாக உருமாறி பழிவாங்கும். இந்த படத்தில் அப்படி இருக்காது. இந்த படத்தில் பாம்புக்கு பெயர்கூட கிடையாது.

இவ்வாறு அவர் கூறினார்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close