[X] Close

ராசி, நட்சத்திரத்துக்கு ஒரு பாடல்


  • kamadenu
  • Posted: 06 May, 2019 08:18 am
  • அ+ அ-

ஹரீஷ் கல்யாண், ‘பியார் பிரேமா காதல்’, ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து நடிக்கும் படத்துக்கு ‘தனுசு ராசி நேயர்களே’ என்று பெயரிடப்பட்டுள்ளது. மோனிகா ஜான், ரியா சக்ரவர்த்தி என 2 கதாநாயகிகள் இதில் நடித்துள்ளனர்.

படப்பிடிப்பு முடிந்து, ரிலீஸ் வேலைகளில் ஈடுபட்டு வந்த நிலையில், படத்தில், ராசி, நட்சத்திரங்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு பாடல் இருந்தால் நன்றாக இருக்கும் என்ற யோசனை வந்ததால், அதற்கான வேலைகளில் இறங்கியுள்ளது படக்குழு.

இதுகுறித்து இயக்குநர் சஞ்சய் பாரதி கூறியதாவது:

இந்த படத்தின் நாயகன், ஜாதகம், ஜோசியத்தில் நம்பிக்கை உடையவர். அதன் அடிப்படையில்தான் வாழ்க்கையில் எல்லா தருணங்களிலும் முடிவெடுக்க விரும்புபவர்.

எனவே, இந்த கருத்துடன் தொடர்புடைய, கதாபாத்திரத்தின் தன்மையை சொல்லும் ஒரு பாடல் இருந்தால் பொருத்தமாக இருக்கும் என்று உணர்ந்தோம். அதனால் தற்போது அந்த வேலை நடந்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close