[X] Close

'ஆட்டோகிராப் 2' வருமா? - இயக்குநர் சேரன் பதில்


2

  • kamadenu
  • Posted: 05 May, 2019 16:49 pm
  • அ+ அ-

-ஸ்கிரீனன்

'ஆட்டோகிராப் 2' குறித்து இயக்குநர் சேரன் அளித்துள்ள பதிலுக்கு இணையத்தில் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

சேரன் இயக்கி, தயாரித்து, நாயகனாக நடித்த படம் 'ஆட்டோகிராப்'. 2014-ம் ஆண்டு வெளியான இப்படத்தில் கோபிகா, சிநேகா, மல்லிகா, கனிகா, இளவரசு, ராஜேஷ் உள்ளிட்ட பலர் சேரனுடன் நடித்தனர்.

தேசிய விருது, தமிழக அரசு விருது மற்றும் பல்வேறு திரைப்பட விழாக்களில் விருது என பல விருதுகளைக் குவித்த படம் 'ஆட்டோகிராப்'. இயக்குநர் சேரனின் திரையுலக வாழ்க்கையில் அவருக்கு உலகளாவிய பெருமையைத் தேடிக் கொடுத்த படம் என்று சொல்லலாம். இதற்குப் பிறகு 'ஆட்டோகிராப் 2' படம் திட்டமிட்டார். ஆனால், அச்சமயத்தில் அப்படம் கைவிடப்பட்டது.

'திருமணம்' படத்துக்குப் பிறகு தனது அடுத்த படத்தின் இயக்கம் குறித்து கதை விவாதத்தில் ஈடுபட்டு வருகிறார் இயக்குநர் சேரன். மேலும், தனது ட்விட்டர் பக்கத்தைக் குறிப்பிட்டு எழுப்பப்படும் கேள்விகளுக்கும் பதிலளித்து வருகிறார்.

சமீபத்தில், “’ஆட்டோகிராப் 2’ வாய்ப்பு இருக்கிறதா சார்?” என்று சேரனிடம் கேள்வி எழுப்பினார் ஒரு ரசிகர். அதற்கு "கண்டிப்பாக வரும்" என்று பதிலளித்துள்ளார் சேரன். இப்பதிலுக்கு 'பலரும் ஆவலோடு காத்திருக்கிறோம்' என்று சேரனுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

மேலும், திரையுலக பிரபலங்கள் சிலரும் சேரனின் இப்பதிலுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close