[X] Close

திமுகவுக்கு கரு.பழனியப்பன் பிரச்சாரம்: கமல் ஆதரவு இயக்குநர் சாடல்


  • kamadenu
  • Posted: 13 Apr, 2019 21:20 pm
  • அ+ அ-

-ஸ்கிரீனன்

திமுகவுக்கு கரு.பழனியப்பன் பிரச்சாரம் தொடர்பாக, கமல் ஆதரவு இயக்குநர் ராஜேஷ் எம்.செல்வா சாடியுள்ளார்.

மக்களவைத் தேர்தல் பிரச்சாரக் களத்தில் இம்முறை திமுக கூட்டணிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வருகிறார் இயக்குநர் கரு.பழனியப்பன். முதலில் அரசியல் கருத்துகளை மட்டுமே பேசி வந்தவர், இம்முறையே முதலாவதாக ஒரு அரசியல் கூட்டணியை ஆதரித்து பேசி வருகிறார்.

கரு.பழனியப்பனின் இந்தப் பிரச்சாரப் பயணம் இணையத்தில் பெரும் சர்ச்சையை உருவாக்கியது. பலரும் அவரது பிரச்சாரப் புகைப்படத்தை பதிவிட்டு, கிண்டல் செய்தும் சாடியும் வருகிறார்கள். இதனை இயக்குநர் ராஜேஷ் எம்.செல்வாவும் சாடியுள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “திரு. கரு. பழனியப்பன் அவர்களே, ஒருவரை துணிச்சலுடன் எதிர்க்க...................................... விடுங்க... 

உங்க பேச்ச கேட்டு ஏமாந்த ஒரு “சிலரில்” நானும் ஒருவன். நிறம்’ சரியான நேரத்தில் வெளுத்தது சிறப்பு..! மாற்றத்துக்கு 'மக்கள் நீதி மய்யம்'” என்று தெரிவித்துள்ளார். இவர் கமலிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர்.

'விஸ்வரூபம்', 'விஸ்வரூபம் 2', 'உத்தமவில்லன்' உள்ளிட்ட படங்களில் கமலுடன் பணிபுரிந்துவிட்டு, கமல் நடித்த 'தூங்காவனம்' படத்தின் மூலமாக இயக்குநராகவும் அறிமுகமானார். தற்போது கமல் மற்றும் ட்ரைடண்ட் ஆர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் 'கடாரம் கொண்டான்' படத்தை இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close