[X] Close

பெங்களூரு மத்திய தொகுதியில் பிரகாஷ்ராஜ் போட்டி: விஷால் ஆதரவு


  • kamadenu
  • Posted: 12 Apr, 2019 10:37 am
  • அ+ அ-

-ஸ்கிரீனன்

மக்களவைத் தேர்தலில் பெங்களூரு மத்திய தொகுதியில் பிரகாஷ்ராஜ் சுயேட்சையாக போட்டியிடுகிறார். இதற்கு விஷால் தன் ஆதரவைத் தெரிவித்துள்ளார்.

பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின்பும், பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொல்லப்பட்ட பிறகும் பாஜகவையும், பிரதமர் மோடியையும் கடுமையாக எதிர்த்து வந்தார் நடிகர் பிரகாஷ்ராஜ். தொடர்ச்சியாக தனது ட்விட்டர் பக்கத்தில் பாஜகவுக்கு எதிராக கடுமையான கருத்துகளை வெளியிட்டு வந்தார். இந்த மக்களவைத் தேர்தலில் பெங்களூரு மத்திய தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடுகிறார். இதற்காக நீண்ட நாட்களாகவே தீவிர பிரச்சாரத்திலும் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் பிரகாஷ்ராஜூக்கு நடிகர் விஷால் தன் ஆதரவைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் பேசியிருப்பதாவது:

எல்லோருக்கும் வணக்கம். இன்றைக்கு இருக்குற அரசியல் சூழ்நிலையில், சுயேச்சையாக நின்று தேர்தலில் ஜெயிப்பது சாதாரணமான விஷயமல்ல. அதற்கு நிறைய தைரியம் வேண்டும். சமுதாயத்துக்கு இந்த நாட்டுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற உணர்வு வேண்டும்.

அந்த வகையில் ஒரு தகுதி வாய்ந்த, வெற்றி பெற வேண்டிய வேட்பாளர் பிரகாஷ்ராஜ் சார். வித்தியாசமான நடிகர், மனிதர் மற்றும் சமூக அக்கறை உள்ளவர். இந்த சமுதாயத்தில் எது நல்லது நடந்தாலும், கெடுதல் நடந்தாலும் உடனடியாக குரல் கொடுத்துள்ளார்.

நல்ல செய்ய வேண்டும் என்ற உணர்வு நம் குடும்பத்துக்கு மட்டுமல்ல, இந்த சமுதாயத்துக்கும் பண்ண வேண்டும் என்று ஒரு சில மனிதர்கள் மட்டுமே யோசிப்பார்கள். அந்த வகையில் பிரகாஷ்ராஜ் சார் வெற்றி பெற அனைத்து தகுதிகளும் வாய்ந்தவர். அவர் பெங்களூரு மத்திய தொகுதியில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுகிறார். விசில் சின்னத்தில், எண் 14-ல் போட்டியிடுகிறார்.

நான் விசில் அடிக்கப் போகிறேன். கண்டிப்பாக மக்கள் உங்களுக்கு விசில் அடிப்பார்கள். நீங்கள் நினைத்த மாதிரியே இந்த தேர்தலில் ஜெயித்து, உங்கள் தொகுதி மக்களுக்கு நல்லது பண்ணுவீர்கள் என்று நான் நம்புகிறேன். வாழ்த்துகள் பிரகாஷ்ராஜ் சார்!

இவ்வாறு விஷால் அந்த வீடியோ பதிவில் பேசியுள்ளார்.

விஷால் பேச்சு 

தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் விஷால் அணியில் போட்டியிட்டு, துணைத் தலைவராக பணிபுரிந்தவர் பிரகாஷ்ராஜ். இருவரும் நெருங்கிய நண்பர்களாக என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close