[X] Close

அமீர் என் குரு!


  • kamadenu
  • Posted: 12 Apr, 2019 09:00 am
  • அ+ அ-

அமீர் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவாகி வரும் ‘சந்தன தேவன்’ படத்தின் நாயகிகளில் ஒருவராக நடித்து  வரும் அதிதி அடுத்தடுத்து ஹிந்தி, மலையாளம், தெலுங்கு என சினிமா உலகின் எல்லா திசைகளிலும் 360 டிகிரியில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார்.

‘‘என்னோட கேரியரில்  ‘சந்தன தேவன்’ படம் மைல்கல். தமிழ் பேசவே கஷ்டப்பட்ட நேரத்தில் கிடைத்த படம். அந்தப் படம் வழியேதான் சிறப்பாக தமிழ் பேசக் கற்றுக்கொண்டேன்.  பொள்ளாச்சி பின்னணியில் வரலாற்று பதிவுகள் நிறைந்த கிராமத்துப் படம். பார்த்துப் பார்த்து செதுக்குகிறார் இயக்குநர் அமீர். கலை வழியே மற்றுமின்றி  சொந்த வாழ்க்கைக்கும் நிறைய நம்பிக்கை அளிக்கக்கூடிய உத்வேகத்தை அளிக்கக்கூடிய இயக்குநர் அவர். எனக்கு அவர் குரு மாதிரி. இதையடுத்து ஹிந்தி, தமிழ் என இருமொழிகளில் உருவாகும் படம், நேரடி தெலுங்கு மொழிப் படம் என மே மாதம் முதல் செம பிஸியாகிறேன்!’’ - என்றவரிடம், கடந்த சில மாதங்களுக்கு முன்பு  காதல், திருமணம் என்று உங்களைச் சுற்றி சர்ச்சையான செய்திகள் வெளிவந்ததே? என்றதும், ‘‘நம்மைச் சுற்றி சின்னச் சின்ன விஷயம் கசிய ஆரம்பித்தாலும், அது பெரிய செய்தியாகிவிடுகிறது. அப்படித்தான்  அந்தச் செய்தியும். அதில் உண்மை இல்லை. எப்போதும் அதுபோன்ற செய்திகளில் இருந்து நான் எளிதாக  வெளியே வந்துவிடுவேன்!’’ என்றார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close