[X] Close

நகைச்சுவைக்கு நான் பொறுப்பு


  • kamadenu
  • Posted: 12 Apr, 2019 08:59 am
  • அ+ அ-

அரவிந்த் சுவாமி நடிப்பில் வெளியான  ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ படத்தில் நடித்த நிகிஷா படேல் தற்போது  எழில் இயக்கும் புதிய படத்தில் ஜி.வி பிரகாஷுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இதுகுறித்து நிகிஷா படேல் கூறியதாவது: ’‘டைரக்டர் எழில் இயக்கும் படத்தில் எப்போதும் நாயகிக்கு  முக்கியத்துவம் இருக்கும். தற்போது ஜி.வி.பிரகாஷுடன் நடித்து வரும் இப்படத்தில் கணினி நிறுவனம் ஒன்றில் ஊழியராக  நடிக்கிறேன்.  படத்தின் நகைச்சுவை பகுதியின் ஆன்மாவே நான்தான் என்று சொல்லலாம். எழில் படங்கள் எப்போதுமே குடும்பத்துடன் ரசிக்கும் அளவுக்கும் இருக்கும். பிரச்சினைகளை மறந்து சிரித்துக்கொண்டே இருக்கலாம். இப்படமும் அந்த வகையை பூர்த்திசெய்யும்!’’ என்றார்

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close