[X] Close

சீனு ராமசாமி இயக்கத்தில் அருள்நிதி


  • kamadenu
  • Posted: 10 Apr, 2019 19:50 pm
  • அ+ அ-

'மாமனிதன்' படத்தைத் தொடர்ந்து, சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படத்தில் நாயகனாக நடிக்க அருள்நிதி ஒப்பந்தமாகியுள்ளார்.

'கண்ணே கலைமானே' படத்தைத் தொடர்ந்து, யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் உருவான 'மாமனிதன்' படத்தை இயக்கியுள்ளார் சீனு ராமசாமி. இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

விஜய் சேதுபதி, காயத்ரி, குரு சோமசுந்தரம் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு யுவன் இசையமைத்துள்ளார். ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், 'மாமனிதன்' படத்தைத் தொடர்ந்து சீனு ராமசாமி இயக்கவுள்ள அடுத்த படத்தை டைம் லைன்ஸ் சினிமாஸ் நிறுவனம் தயாரிக்க முன்வந்தது.

அதனைத் தொடர்ந்து படத்தின் முதற்கட்டப் பணிகள் தொடங்கப்பட்டன. தற்போது, இப்படத்தின் நாயகனாக அருள்நிதியும், இசையமைப்பாளராக யுவன் சங்கர் ராஜாவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். நாயகி மற்றும் இதர கதாபாத்திரங்களுக்கான நடிகர்கள் தேர்வு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close