[X] Close

தயாரிப்பாளராக மாறிய நடிகர் கிருஷ்ணா


  • kamadenu
  • Posted: 10 Apr, 2019 15:13 pm
  • அ+ அ-

அமலா நடிக்கும் 'ஹை ப்ரீஸ்டெஸ்' (High Priestess) என்ற புதிய தொடரை நடிகர் கிருஷ்ணா தயாரிக்கிறார்.

'அலிபாபா', 'கழுகு', 'பண்டிகை', 'வன்மம்' உள்ளிட்ட படங்களில் நடித்தவர் கிருஷ்ணா. இயக்குநர் விஷ்ணுவர்தனின் தம்பியான இவர் தற்போது தயாரிப்பாளகவும் மாறியிருக்கிறார். ட்ரைபல் ஹார்ஸ் எண்டர்டெயின்மெண்ட் என்ற பெயரில் இவர் தயாரிக்கும் ’ஹை ப்ரீஸ்டெஸ்’ (High Priestess) வெப் சீரிஸ் zee5 தளத்தில் வெளியாக உள்ளது. இதில் நடிகை அமலா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இது நடிகர் கிருஷ்ணா கூறும்போது, "நான் நிறைய நல்ல கதைகளை ரசிகர்களுக்கு கொடுக்க விரும்புகிறேன். ட்ரைபல் ஹார்ஸ் எண்டர்டெயின்மெண்ட் இப்போதைக்கு வெப் சீரீஸ், டிஜிட்டல் ஒரிஜினல்ஸ் மற்றும் திரைப்படங்களில் கவனம் செலுத்தும்.

தெலுங்கில் உருவான என்னுடைய முதல் தயாரிப்பான High Priestess என்ற வெப் சீரீஸ் மிகச்சிறப்பாக வந்திருப்பது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. இதை நானே எதிர்பார்க்கவில்லை. அமலா போன்ற ஒரு மாபெரும் கலைஞர் இதில் நடிப்பது ஒரு உண்மையான மகிழ்ச்சி. என்னுடைய அடுத்த தயாரிப்பு தமிழில் இருக்கும்" என்றார்.

புஷ்பா இக்னாஷியஸ் இயக்கியிருக்கும் இந்த வெப் சீரீஸ் வரும் ஏப்ரல் 25 முதல் ZEE5 வலைதளத்தில் ஒளிபரப்பாகிறது. இதில் வரலட்சுமி சரத்குமார், சுனைனா, விஜயலட்சுமி,  கிஷோர், பிரம்மாஜி, ஆதவ் கண்ணதாசன், பிக் பாஸ் நந்தினி ராய் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close