[X] Close

‘கடாவர்’ அமலா பால்


  • kamadenu
  • Posted: 06 Apr, 2019 08:08 am
  • அ+ அ-

ஆடை’, ‘அதோ அந்தப் பறவை போல’ ஆகிய படங்களைத் தொடர்ந்து நடிகை அமலாபால் நாயகியை மையமாகக் கொண்ட மற்றொரு படத்தில் கவனம் செலுத்தி வந்தார். இப்படத்துக்கு ‘கடாவர்’ என்று பெயரிட்டுள்ளனர். படத்தில் தடய நோயியல் நிபுணராக நடிகை அமலா பால் நடிக்கிறார். மேலும் இப்படத்துக்கு இணைத் தயாரிப்பாளர் பொறுப்பையும் ஏற்றுள்ளார்.

இந்தப் படத்தில் நடிப்பது பற்றி அமலா பால் கூறும்போது, “ஒரு திரைக்கலைஞராக, இதுவரை மாடர்ன் மற்றும் வணிகரீதியான கதாபாத்திரங்களில் நடித்தேன். இப்போது என்னை நடிகையாக அடுத்த கட்டத்துக்கு உயர்த்தும் கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுக்கும் தெளிவு கிடைத்திருப்பதாக நம்புகிறேன். அத்தகைய ஒரு முடிவை எடுத்தப் பிறகு ‘அதோ அந்தப் பறவை போல’, ‘ ஆடை’ ஆகிய படங்களுக்குப் பிறகு, இந்த ‘கடாவர்’ கதையைக் கேட்டேன். இதில் நடிக்க நான் நிறைய தயாராக வேண்டி யிருந்தது.

இந்தப் படத்தில் இடம்பெறும் வியூகங்கள் வழக்கமான விசாரணைகள்போல இருக்காது. கேரளாவின் மிகப் பிரபலமான தடய அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர்  உமா டத்தனால் எழுதப்பட்ட ‘ஒரு போலீஸ் சர்ஜனோடே ஓர்ம குறிப்புகள்’ என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. இந்தப் படத்தில் நடிக்கத் தயாராவதற்கு முன்பாக அந்தப் புத்தகத்தை வாசித்ததோடு மட்டுமல்லாமல்; அந்தத் துறையைப் பற்றிய மேலும் நுணுக்கமான செய்திகளைத் தெரிந்துகொள்ள, ஒரு தடய அறுவை சிகிச்சை நிபுணருடன் 2 நாட்கள் கலந்தாலோசித்தேன்!’’ என்றார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close