[X] Close

காதல் என்றால் கப்சிப் காராபூந்தி நான்!- தொகுப்பாளினி நிவேதிதாவின் கலகல


  • kamadenu
  • Posted: 05 Apr, 2019 09:20 am
  • அ+ அ-

சன் மியூசிக் சேனலின் தற்போதைய சீனியர் தொகுப்பாளினி நிவேதிதாதான். ‘கோலிவுட் சென்ட்ரல்’, ‘செம மார்னிங்’, ‘ஹிட் லிஸ்ட்’ என விதவிதமான நிகழ்ச்சிகளைத் தொகுத்து அசத்தி வருகிறார். அவருடன் கலகலப்பான ஓர் உரையாடல்:

மியூசிக் சேனலில் முன்பெல்லாம் ஏகப்பட்ட தொகுப்பாளினிகள் வலம் வருவார்கள். இப்போதெல்லாம் குறைந்து வருகிறதே?

எங்கள் சேனலில் இப்போது நாங்கள் 6 பேர் இருக்கிறோம். அதில் பெண்கள் இரண்டு பேர். முன்பெல்லாம் ஒரு நிகழ்ச்சி என்றால் அதை ஒரே தொகுப்பாளினிதான் மாதக்கணக்கில் தொகுத்து வழங்குவார். அதனால் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஒவ்வொரு தொகுப்பாளினியாக வந்து வந்து போவார்கள். இப்போது அப்படியில்லை. இந்த வாரம் நான் காலையில் ‘செம மார்னிங்’ ஷோ வழங்கினால், அடுத்த வாரம் ஈவ்னிங் ‘ஹிட் லிஸ்ட்’ என்று ஒரு வெரைட்டி நிகழ்ச்சிக்குள் போய்விடுவேன். திரும்பவும் அதற்கு அடுத்த வாரம் மீண்டும் முந்தைய நிகழ்ச்சிக்கு வந்துவிடுவேன். இப்படி அவ்வப்போது மாறிமாறி நிகழ்ச்சி செய்கிறபோது, ஒரே மாதிரி நிகழ்ச்சி இல்லை என்று ஒரு பெயர் கிடைக்கும். இதுவும் நல்லதுதானே!

யூ-டியூப் சேனல் வழியே பாடல்கள் ரசிக்கப்படுவது அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மியூசிக் சேனலுக்கான பார்வையாளர்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்பு உள்ளதுதானே?

ஒரு பாடல் எப்படி இருக்கு என்று யூ-டியூப்பில் பார்ப்பார்களே தவிர, அதைத் திரும்பத் திரும்பப் பார்க்கும் சூழல் சேனலில் கிடைப்பது போல அமைந்துவிடாது. மேலும் அதற்கு இன்டர்நெட் செலவும் இருக்கு. இந்த மாதிரி தொலைக்காட்சியில் இல்லையே. யூ-டியூப்பில் ஒரு பாட்டு ரிலீஸ் ஆகும் அதே நேரத்தில், அதே பாடலை நாங்களும் எங்கள் சேனல் வழியே ரிலீஸ் செய்கிறோம். அதைவிட ஒரு படத்தில் வரும் பாடல் மேக்கிங் வீடியோவை நாங்கள்தான் முதன்முதலாக ரிலீஸ் செய்கிறோம். முறையாக உரிமம் பெற்ற படத்தின் ஒவ்வொரு பாடலாக அறிமுகம் செய்யும் விஷயங்களும் சேனலில் நடக்கிறது. இப்படி புதுப் பாடல் தொடங்கி, பழையப் பாடல் வரைக்கும் சேனல் வழியே ரசிகர்கள் கொண்டாடிக்கொண்டுதான் இருக்கிறார்கள். நினைத்த நேரத்தில் பிடித்த பாடலைக் கேட்டு ரசிக்கும் மியூசிக் சேனலுக்குதான் எப்பவும் ஆயுள் அதிகம்!

சன் மியூசிக் சேனல் சீனியர் தொகுப்பாளினியான நீங்கள் பொறுப்புக்கு வந்து கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் ஆகியிருக்குமே?

சன் மியூசிக்கில் இது எனக்கு 7-வது வருஷம். போனதே தெரிய வில்லை. சைக்கிளிங் மாதிரி ஒரே வேலையா என்று சிலர் நினைக்கலாம். ஆனால், இந்த மாதிரி வேலையில் அவ்வப்போது அப்டேட்ஸ் நிறைய இருப்பதால் என்றைக்குமே சோர்வு இருக்காது. நிகழ்ச்சிகளை யும் புதிது புதிதாக வெரைட்டி வெரைட்டியாக யோசித்து வழங்கிக் கொண்டே இருக்கிறோம். தினம் தினம் ஏதாவது தெரிந்து கொண்டே இருக்கவும் முடிகிறது. அதனால்தான் இந்த வேலையைக் கெட்டியாக பிடித்துக்கொண்டேன். நமக்கு என்ன தெரியுமோ, அதை சரியாகச் செய்யணும். அதைத் தான் நானும் அழகாக செய்றேன் என்று நம்புகிறேன்!

நிவேதிதா இன்னுமா காதலில் விழவில்லை?

நான் ஒரு முரட்டு சிங்கிள்! காதல் என்றால் எத்தனை கிலோ என்று கேட்கும் ரகம் நான். இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது போட்டோ பதிவிடும்போது அதில் ‘அதெர் மெசேஜ்’ என்று ஒரு பகுதி இருக்கும். அதில் வரும் மெசேஜ் எல்லாவற்றையும் படிப்பேன். என்னாலயே நம்ப முடியாது. அந்த அளவுக்கு என்னை புகழ்ந்து கவிதைகள் எல்லாம் ரசிகர்கள் எழுதியிருப்பார்கள். ‘உங்களுக்கெல்லாம் என்னப்பா ஆச்சு!’ என்று நானே கேட்டுப்பேன்.

அதனாலயே புதிய நண்பர்கள் யாரும் லைனில் வந்தால் ‘அக்கா’ என்று தொடங்கினால்தான் பேச்சை தொடர்வேன். இல்லைன்னா கப் சிப் காராபூந்திதான்!

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close