[X] Close

ஒரே வீட்டில் திருடனும் போலீஸும்!


  • kamadenu
  • Posted: 05 Apr, 2019 09:21 am
  • அ+ அ-

இளம் தம்பதி, தங்களின் திருமண வாழ்க்கையை ஒரு மர்மமான பின்னணியில் தொடங்கும்போது எழும் முரண்பட்ட உணர்வுகளையும், மனக் குமுறல்களையும் உள்ளடக்கமாகக் கொண்ட தொடராக ‘கலர்ஸ்’ தமிழ் சேனல் ‘மலர்’ என்ற புதிய தொடரை ஒளிபரப்புகிறது.

மலர் (நாயனா ஷெட்டி) மற்றும் கதிர் (அருண் பத்மநாபன்) ஆகிய இருவரும் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வரும் இக்கதையை, ரொமான்டிக் மற்றும் த்ரில்லர் தொடராக இயக்கி வருகிறார் ஜெய் அமர் சிங். இவர் ‘கலர்ஸ்’ தமிழ் சேனலில் ஒளிபரப்பான ‘சிவகாமி’ தொடரை இயக்கியவர். அஹமத் இயக்கத்தில் வெளியான ‘என்றென்றும் புன்னகை’ படத்தின் துணை இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.

இந்தத் தொடரைப் பற்றி அதன் இயக்குநர் ஜெய் அமர் சிங் கூறியதாவது : கொலை செய்த ஒரு பெண், காவல் துறை அதிகாரியை எதிர்பாராதவிதமாக திருமணம் செய்துகொள்ள நேர்கிறது. திருடனும், போலீஸும் ஒரே வீட்டுக்குள் இருந்தால் என்ன நடக்கும்? அதுதான் களம். பரபரப்பும், திருப்பங்களும் குறையாமல் இளமை ஓட்டத்துடன் இத்தொடரைக் கொடுக்க வேண்டும் என்ற பொறுப்போடு வழங்கி வருகிறோம்!’’ என்றார் .

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close