[X] Close

பெண்களின் நம்பிக்கைக்காக..


  • kamadenu
  • Posted: 05 Apr, 2019 09:22 am
  • அ+ அ-

‘புதுயுகம்’ சேனல் வழியே ‘பெண்கள் சாய்ஸ்’ எனும் பெயரில் முழுக்கவும் பெண்களுக்கான ஒரு நிகழ்ச்சியை வழங்கி வருகிறார் தேவி ஸ்ரீ. இது வீட்டில் இருக்கும் பரபரப்பான இல்லத்தரசிகளுக்கும், வேலைக்குச் செல்லும் சுறுசுறுப்பான பெண்களுக்குமான நிகழ்ச்சி. இதில் எண்ணற்ற விஷயங்களை நேர்த்தியுடன் சொல்லித் தரும் பயிற்சிக் களம் என்றும் மகிழ்கிறார், தொகுப்பாளினி தேவி ஸ்ரீ.

‘என்றைக்காவது ஒருநாள் நிகழ்ச்சித் தொகுப்பாளினி ஆகியே தீர வேண்டும்’ என்ற கனவோடு வளர்ந்த பெண் நான். இன்றைக்கு நடனம், தொகுப்பாளினி, ஃபேஷன் டிசைனிங் என்று கிளை

படர்ந்து பயணிக்க முடிவதும் மகிழ்ச்சியாக உள்ளது. ‘புதுயுகம்’ சேனலுக்குள் வந்து ஓராண்டு ஆக இன்னும் சில வாரங்கள்தான் உள்ளன.

‘நட்சத்திரப் பட்டறை’ என்ற ஒரு குழுவில் 6 மாதம் பயிற்சிப் பெற்று, தொகுப்பாளினியாக வந்தேன். இப்போது நிறையப் பாராட்டுகள் குவிகின்றன. இந்த நிகழ்ச்சி வழியாக, வீட்டுத் தோட்டம், அழகுக் கலை, உடற்பயிற்சி உள்ளிட்டவை குறித்து நிகழ்ச்சிகள் வழங்கி பெண்களுக்குள் நம்பிக்கையை விதைக்க முடிகிறது. நானும் ஒரு பெண்ணாகவே இருந்து இதனை வழங்கும்போது கூடுதல் பொறுப்பும் மகிழ்ச்சியும் உண்டாகிறது!’’ என்கிறார், தேவி ஸ்ரீ!

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close