[X] Close

ராம்சரணுக்கு காயம்: படப்பிடிப்பு ரத்து - 'ஆர்ஆர்ஆர்' படத்துக்குப் பின்னடைவு


  • kamadenu
  • Posted: 04 Apr, 2019 14:32 pm
  • அ+ அ-

-ஸ்கிரீனன்

ராம்சரணுக்கு காயம் ஏற்பட்டுள்ளதால், 'ஆர்ஆர்ஆர்' படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சிறு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

'பாகுபலி' படங்களின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு சர்வதேச அளவில் கவனம் ஈர்த்திருப்பவர் இயக்குநர் ராஜமௌலி. அடுத்து, ராம்சரண் தேஜா, ஜூனியர் என்.டி.ஆர் , அஜய் தேவ்கன், அலியா பட், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடிக்கும் 'ஆர்ஆர்ஆர்' படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத் மற்றும் அதன் சுற்றுப்புற இடங்களில் நடைபெற்று வந்தது. தற்போது ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், அலியா பட் உள்ளிட்ட பலர் பங்கேற்கும் முக்கியமான காட்சிகளை புனேவில் படமாக்கத் திட்டமிட்டனர். இதற்காக அனைவரது தேதிகளும் வாங்கப்பட்டு, திட்டமிட்டது படக்குழு.

ஆனால், எதிர்பாராத விதமாக ராம்சரணுக்கு காயம் ஏற்பட்டதால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. இது தொடர்பாக 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ட்விட்டர் பக்கத்தில் ''உடற்பயிற்சி கூடத்தில் நேற்று பயிற்சி மேற்கொண்டபோது ராம்சரண் கணுக்காலில் சிறு காயம் ஏற்பட்டது. இதனால் புனே படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. 3 வாரங்களில் மீண்டும் பணியில் இணைவார்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 வாரங்களுக்குப் பிறகு மீண்டும் அனைவரது தேதிகளையும் வாங்கி, படப்பிடிப்பை திட்டமிட வேண்டும். இதனால், சிறு பின்னடைவைச் சந்தித்ததுள்ளது படக்குழு.

கிட்டத்தட்ட ரூ.350 கோடி முதல் ரூ.400 கோடி வரை படத்தின் பட்ஜெட் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என அனைத்து முக்கிய மொழிகளிலும் அடுத்த ஆண்டு ஜூலை 30-ம் தேதி படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close