[X] Close

கார்த்தி படத்தில் ‘கேஜிஎஃப்’ வில்லன்


  • kamadenu
  • Posted: 04 Apr, 2019 10:50 am
  • அ+ அ-

கார்த்தி நடித்துவரும் புதிய படத்தில், ‘கேஜிஎஃப்’ படத்தில் வில்லனாக நடித்த ராம்சந்திர ராஜு நடிக்கிறார்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘ரெமோ’ படத்தை இயக்கியவர் பாக்கியராஜ் கண்ணன். கடந்த 2016-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில், ஹீரோயினாக கீர்த்தி சுரேஷ் நடித்தார். அனிருத் இசையமைத்த இந்தப் படத்தில், பெண் வேடமிட்டு நடித்தார் சிவகார்த்திகேயன்.

‘ரெமோ’ படத்தைத் தொடர்ந்து, கார்த்தி நடிப்பில் தற்போது ஒரு படத்தை இயக்கி வருகிறார் பாக்கியராஜ் கண்ணன். இன்னும் தலைப்பு வைக்கப்படாத இந்தப் படத்தில், தெலுங்கு நடிகை ராஷ்மிகா மண்டன்னா ஹீரோயினாக நடிக்கிறார். விஜய் தேவரகொண்டா ஜோடியாக ‘கீதா கோவிந்தம்’ படத்தில் நடித்தவர் இவர்.

இசையமைப்பாளராக விவேக் - மெர்வின், ஒளிப்பதிவாளராக சத்யன் சூரியன், கலை இயக்குநராக ஜெய், சண்டைப் பயிற்சியாளராக திலீப் சுப்பராயன், எடிட்டராக ரூபன், ஆடை வடிவமைப்பாளராக உத்ரா மேனன் ஆகியோர் பணியாற்றி வருகின்றனர்.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு இருவரும் இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர். சென்னை மற்றும் ஹைதராபாத்தில் இதன் படப்பிடிப்பு நடைபெறுகிறது.

இந்நிலையில், ‘கேஜிஎஃப்’ படத்தில் வில்லனாக நடித்த ராம்சந்திர ராஜு இந்தப் படத்தில் நடிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்திலும் அவர் வில்லனாகத்தான் நடிக்கிறார்.

இந்தப் படத்துக்குப் பிறகு ஜீத்து ஜோசப் இயக்கும் தமிழ்ப் படத்தில் நடிக்கிறார் கார்த்தி.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close