[X] Close

ரசிகர்களிடம் வெறுப்பையும் சம்பாதித்துதான் ஆக வேண்டும்!- ‘சூப்பர் டீலக்ஸ்’ அனுபவம் பற்றி பகிர்கிறார் சமந்தா


  • kamadenu
  • Posted: 04 Apr, 2019 07:59 am
  • அ+ அ-

சந்திப்பு : மகராசன் மோகன்

நம்ம சமந்தாவா இது? நன்றாக யோசித்துதான் இப்படி ஒரு கதாபாத்திரத்தை சமந்தா தேர்வு செய்தாரா? என கோலிவுட் சினிமா வட்டாரத்தில் தீக்குச்சி கொளுத்திப் போடாமலேயே பரவி வருகிறது ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் அவர் ஏற்று நடித்த, ‘வேம்பு’ கதாபாத்திரத்தின் தீச்சுவாலை.

இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா அப்படி என்னதான் சொல்லி அந்தக் கதாபாத்திரத்தில் அவரை நடிக்க வைத்தார்? என்பன உள்ளிட்ட பல கேள்விகளுக்கு சமந்தா அளித்த பதில்கள் இங்கே:

‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தின் ‘வேம்பு’ கதாபாத்திர வடிவமைப் பைக் கேட்டதும் உங்கள் மன நிலை என்னவாக இருந்தது?

கதையை கேட்ட தும் சற்று பயமாகத் தான் இருந்தது. ஆனால், இந்த பயம்தான் நல்லது என நினைத்தேன். ஒரு நடிகைக்கு ‘வேம்பு’ மாதிரியான கதாபாத்திரங்கள் பெரும் சவால். இந்த மாதிரி கதைக்குள் விஜய் சேதுபதி, பகத் ஃபாசில், ரம்யா கிருஷ்ணன் போன்ற சிறந்த நடிகர்கள் இருக்கும்போது, என் கதாபாத்திரம் சிறப்பாக என்னைக் கவனிக்க வைத்தது நான் சற்றும் எதிர்பார்க் காததுதான். இயக்குநர் தியாகராஜன் குமார ராஜா என்னிடம் கதை சொல்லும்போது அவரது கண்களில் இருந்த உண்மையும், அர்ப்பணிப்பும் என்னை யோசிக்க வைத்தது. எதனாலும் பாதிக்கப்படாத ஒரு இயக்கு நரைப் பார்க்க புத்துணர்வாக இருந்தது.

இது மாதிரியான கதாபாத்திரம் உங்களைத் தேடி வந்ததா? இதற்கு முன்பு ஏன் அப்படி நடிக்கவில்லை?

குறும்புக்கார கதாநாயகி கதாபாத்திரத்தில் நடிப்பது எளிது. நான் அழ, சிரிக்க, குறும்பு செய்ய குறிப்பிட்ட வழிகள் உள்ளன. ஆனால் எனக்கு பரிச்சயமில் லாத கதாபாத்திரத்தில் எப்படி அசலான நடிப் பைத் தருவது? ஒவ் வொரு முறையும் ஹாலிவுட்டிலும், பாலி வுட்டிலும் வலிமை யான பெண் கதாபாத்தி ரங்களைப் பார்க்கும் போது நமக்கு ஏன் இப் படியான வாய்ப்புகள் வருவதில்லை என நினைத் திருக்கிறேன்.

‘வேம்பு’ கதாபாத்திரம் கிடைத்ததில் மகிழ்ச்சி. வேறொருவருடன் உறவு வைத்துக்கொண் டேன் என கணவனிடமே சொல்ல வேண் டிய கதாபாத்திரம். ரசிகர்களின் வெறுப்பை சம்பாதிக்கும் கதாபாத்திரம். முடிவில் வெறுத் தவர்களே அந்த கதாபாத்திரத்துக்காக வருத் தப்படுவார்கள். ‘வேம்பு’ கதாபாத் திரத்தை நம்பும்படி திரையில் கொண்டு வர நிஜத்தில் நிறைய தன்னம்பிக்கை வேண்டும்.

அப்படியென்றால் அந்த கிளைமாக்ஸ் பாத்திர வடிவம்தான் இந்தப் படத்தை ஒப்புக்கொள்ள காரணமா?

உண்மைதான். கிளைமாக்ஸ் மற்றும் அதற்கு முந்தைய இடங்கள்தான் என்னை வெகுவாக கவர்ந்தவை. ‘வேம்பு’ கதாபாத்திரம் அதற்கு முன்னால் தன் கணவனுக்குத் தெரியாமல் தனது முன்னாள் காதலனுடன், பரஸ்பர சம்மதத்துடன் உறவு வைத்துக்கொள்கிறாள். அதனால், அவள் நடத்தை சரியில்லாதவள் என்று அர்த்த மல்ல. இப்போது இந்த போலீஸ் அவ ளைப் பயன்படுத்திக்கொள்ள நினைக் கிறான். அவளது கணவனையும் சம்மதிக்க வைக்கிறான். ஆனால் இவள் முடியாது என்கிறாள். அதனால்தான் படத்தின் அந்த இறுதிக்கட்ட நகர்வை தனித்து சொல்கிறேன்.

இதற்கு முன்பு நீங்கள் புதுமையாக முயற்சி செய்த படங்கள் தோல்வி அடைந்திருக் கின்றனவே. அதையெல்லாம் தற்போதைய மனநிலையில் எப்படிப் பார்க்கிறீர்கள்?

எனது திரைத்தொழில் வாழ்க்கையில் இதுவரை நான் நடித்த அனைத்துப் படங்களை நினைத்துமே பெருமையடைகிறேன். இப் போது இத்துறையில் நான் அனுபவித்துக் கொண்டிருக்கும் இந்த இடத்தை நான் நடித்த அந்தப் படங்கள்தான் எனக்கு அளித்தன. ‘வேம்பு’ கதாபாத்திரம் எனக்கு 3 வருடங்களுக்கு முன்னால் வந்திருந்தால் என்னால் சரியாக நடித்திருக்க முடியாது. ஏனென்றால் நான் முதிர்ச்சி பெறவில்லை. எனது தொழிலில் நான் நிறைய கற்றது, வளர்ந்தது எல்லாம் தவறுகள் செய்து செய்துதான். எனக்கென வழிகாட்டி யாரும் கிடையாது. எனவே தவறு செய்துதான் நான் கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. உதாரணத்துக்கு, விஜய் சேதுபதி மாதிரி யான மனிதர்கள். அவர், நடிப்பில் தான் ஒரு அசுரன் என்பதை முதல் இரண்டு படங் களிலேயே காட்டிவிட்டார். ஆனால், சிலருக்கு இது வெறும் நடிப்பு சம்பந்தப்பட்டது மட்டும் அல்ல; நாங்கள் நிறைய தயக்கங்களில் இருந்து வெளியே வர வேண்டும். சுயமாக கட்டமைத்துக் கொள்ள நிறைய நேரமாகும்.

திருமணத்துக்குப் பிறகு இம்மாதிரியான புதிய முயற்சிகளில் நடிப்பதற்கு காரணம், கணவர் அளித்த ஊக்கம் என்று சொல்லலாமா?

திருமணம் எனக்கு நிறைய அமைதியை, பாதுகாப்பை, உள்ளுக்குள் சமாதானத்தைக் கொண்டு வந்திருக்கிறது. திருமணத்துக்குப் பிறகு எல்லாம் முடிந்துவிடும் என சொல் வார்கள். ஆனால், எனக்குத் திருமணத்துக் குப் பின்புதான் அனைத்தும் அதிகமாகி இருக்கிறது. திருமணம் எனக்கு வலிமையைத் தந்துள்ளது. எனது குடும்பம் இப்போது தருவது மாதிரியான ஒரு ஆதரவுக் காக நான் எப்போதும் ஏங்கியிருக் கிறேன். வேலையில் கவனம் செலுத்த குடும்பத்தினர் நிறைய நம்பிக்கையைத் தருகின்றனர்.

‘மஜிலி’ படத்தில் மிகவும் சாதாரண பெண்ணாக நடித்ததன் பின்னணி என்ன?

நான் இப்போது எனது அழகைப் பற்றி கவலைப்படும் நிலையில் இல்லை. எனக்கு அளிக்கப்பட்ட கதாபாத்திரத்தை சரியாக பிரதிபலிக்க வேண்டும். இதற்கு முன்னா லும் கவர்ச்சியில்லாத கதாபாத்திரங் களில் நடித்திருக்கிறேன். ஆனால், அந்தப் படங்களில் கொஞ்சம் கவர்ச்சியை கொண்டு வர வேண்டும் என முயற்சித் திருக்கிறேன்.

‘96’ படத்தின் தெலுங்கு ரீமேக் பதிப்பில் நடிக்கிறீர்கள். ஜானுவாக தமிழில் தனித்து அடையாளப்பட்ட த்ரிஷாவின் கதாபாத்திரத்தை ஏற்பது பற்றி?

‘96’ படத்தின் தெலுங்கு ரீமேக்குக்காக என்னை அணுகும்போது நான் தியாகராஜன் குமாரராஜாவைத் தொடர்புகொண்டேன். ‘நீங்க இதை ஒப்புக்கொள்வதன் மூலம் எதையும் இழக்கப் போவதில்லை. நிறைய கிடைக்கப்பெறும்!’ என்றார். ஜானு போன்ற ஒரு சிக்கலான கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு நிறைய கிடைக்காது. பிரேம்குமார் போன்ற அரிதான இயக்குநர் படத்தில் நடிக்கும் வாய்ப்பும் கிடைக்காது. பிறகு ஏன் 60 நாட்கள் மகிழ்ச்சியாக ஒரு சவாலான கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த வாய்ப்பை தவறவிட வேண்டும் என்றும் சொன்னார். அவரது வார்த்தைகள் என்னை ஊக்குவித்தது. அப்படித்தான் நான் ‘96’ தெலுங்கு ரீமேக்குக்குள் நுழைந்தேன்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close