[X] Close

அரவக்குறிச்சி அருகே ஜோதிமணி பிரச்சாரத்தின்போது எதிர்த்து கோஷமிட்ட இருவரால் பரபரப்பு: தாக்கிய திமுகவினருக்கு தம்பிதுரை கண்டனம்


  • kamadenu
  • Posted: 31 Mar, 2019 10:27 am
  • அ+ அ-

திரைப்பட பின்னணிப் பாடகியும், டப்பிங் கலைஞருமான சின் மயியை தென்னிந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் இருந்து நீக்கி பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு சென்னை உரிமையியல் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

திரைத்துறை சார்ந்த பெண் களுக்கு எதிராக இழைக்கப்படும் பாலியல் வன்கொடுமைகள் குறித்து சமூக வலைதளங்களில் பின்னணிப் பாடகி சின்மயி குரல் எழுப்பினார். இந்நிலையில், சங்க விதிகளை மீறி செயல்பட்டதாகக் கூறி கடந்த ஆண்டு சங்கத்தில் இருந்து சின்மயி நீக்கப்பட்டார்.

இதை எதிர்த்து, சின்மயி தரப்பில் சென்னை 2-வது உதவி உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி எஸ்.முருகேசன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கடந்த 2006-ல் இருந்து சங்கத்துக்கான நுழைவுக் கட்டணம், வாழ்நாள் உறுப்பினர் கட்டணங்களை செலுத்தி விட்ட தாகவும், 2018-ம் ஆண்டுக்கான உறுப்பினர் பட்டியலில் தன் பெயர் இருப்பதாகவும் கூறி சின்மயி தரப் பில் ஆவணங்கள் சமர்ப்பிக்கப் பட்டன.

மேலும் தன்னை சங்கத்தில் இருந்து நீக்குவதற்கு முன்பு, தனக்கு நோட்டீஸ் பிறப்பித்து விளக்கம் கேட்காமல், தன்னிச்சை யாக தன்னை நீக்கி சங்க நிர்வாகி கள் உத்தரவு பிறப்பித்துள்ள தாகவும், இது சட்ட விரோதமானது எனவும் சின்மயி தரப்பில் வாதிடப் பட்டது.

இதையடுத்து, பின்னணிப் பாடகி மற்றும் டப்பி்ங் கலைஞரான சின்மயியை சங்கத்தில் இருந்து நீக்கி பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும் இதுதொடர்பாக தென்னிந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி டப்பிங் கலைஞர்கள் சங்கம் மற் றும் அதன் தலைவரான ராதாரவி ஆகியோர் வரும் 25-ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close