[X] Close

மாயாவதியுடன் ஒரே மேடையில் முலாயம்- அகிலேஷ் தகவல்


  • kamadenu
  • Posted: 30 Mar, 2019 08:02 am
  • அ+ அ-

மோடியையும் சீன பிரதமரையும் அவ்வப்போது சீண்டிப்பார்க்கும் காங்கிரஸ் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட 54 நொடிகள் வீடியோ பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

அந்த வீடியோவில், தேச நலனை சமரசம் செய்து கொள்ளும் வகையில் மோடிக்கும் சீன அதிபருக்கும் நட்புறவு இருப்பதாக காங்கிரஸ் குறிப்பிட்டுள்ளது.

முன்னதாக நேற்று, ராகுல் காந்தி பிரதமர் மோடியை கடுமையாக சாடியிருந்தார்.

ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை சீனா தடை செய்தது குறித்து பிரதமர் மோடி வாய்திறந்து கருத்து கூற மறுக்கிறார், பலவீனமான பிரதமர், சீன பிரதமரை கண்டு அஞ்சுகிறார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்திருந்தார்.

இந்நிலையில் இந்த வீடியோவின் ஆரம்பித்தேலேயே, "பாருங்கள் சீன பிரதமரிடன் மோடி எப்படி கோபத்தைக் காட்டுகிறார்" எனக் குறிப்பிட்டுவிட்டு உள்ளே முழுவதும் பிரதமரை கிண்டல் செய்வது போல் தொகுத்திருக்கின்றனர்.

இது தொடர்பாக, நடிகர் மாதவன் தனது ட்விட்டர் பக்கத்தில், "உங்கள் அரசியல் எதிரியாகவே இருந்தாலும்கூட இது மிகவும் மலினமான ரசனை. மோடி இப்போதும் இத்தேசத்தின் பிரதமர்தான். இந்த வீடியோ மூலம் நீங்கள் தேசத்தை அவமதித்துவிட்டீர்கள். பகடி என்ற பெயரில் கீழ்த்தரமான கருத்தை தெரிவித்திருக்கிறீர்கள். இந்த ட்விட்டர் ஹேண்டிலில் இருந்து நாங்கள் இதனை திர்பார்க்கவில்லை" எனப் பதிவிட்டு தனது கண்டனத்தை பதிவு செய்திருக்கிறார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close