[X] Close

சிவகார்த்திகேயன் ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ்?


aishwarya-rajesh-pair-with-sivakarthikeyan

  • காவேரி மாணிக்கம்
  • Posted: 14 Mar, 2019 13:13 pm
  • அ+ அ-

சிவகார்த்திகேயன் ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க இருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் மே 1-ம் தேதி ரிலீஸாகும் படம் ‘Mr. லோக்கல்’. எம்.ராஜேஷ் இயக்கியுள்ள இந்தப் படத்தில், ஹீரோயினாக நயன்தாரா நடித்துள்ளார். ராதிகா சரத்குமார், யோகி பாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்தப் படத்தைத் தொடர்ந்து ‘ஹீரோ’ படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். ‘இரும்புத்திரை’ பி.எஸ்.மித்ரன் இயக்கிவரும் இந்தப் படத்தின் ஷூட்டிங், நேற்று தொடங்கியது. கேஜேஆர் ஸ்டுடியோஸ் சார்பில் கோட்டபாடி ராஜேஷ் தயாரிக்கிறார்.

ஹீரோயின்களாக கல்யாணி ப்ரியதர்ஷன் மற்றும் இவானா என இரண்டு பேர் நடிக்கின்றனர். முக்கியக் கதாபாத்திரத்தில் அர்ஜுன், ரோபோ சங்கர் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்தப் படத்துக்கு, ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய, ரூபன் எடிட் செய்கிறார்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து, பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன். ஏப்ரல் இறுதியில் ஷூட்டிங் தொடங்க இருக்கும் இந்தப் படத்தை, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தில், சிவகார்த்திகேயன் ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க இருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது.

சிவகார்த்திகேயனின் முதல் தயாரிப்பான ‘கனா’ படத்தில் ஹீரோயினாக நடித்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close