[X] Close

அஹமது இயக்கத்தில் ஜெயம் ரவி?


ahamed-will-direct-jayam-ravi

  • காவேரி மாணிக்கம்
  • Posted: 13 Mar, 2019 19:50 pm
  • அ+ அ-

‘மனிதன்’ படத்தை இயக்கிய அஹமது இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஜெயம் ரவி நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘அடங்க மறு’. அறிமுக இயக்குநரான கார்த்திக் தங்கவேலு இயக்கிய இந்தப் படத்தில், ஜெயம் ரவி ஜோடியாக ராஷி கண்ணா நடித்தார். பொன்வண்ணன், சுப்பு பஞ்சு, ஸ்ரீரஞ்சனி, மீரா வாசுதேவன், ராம்தாஸ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்தனர்.

‘அடங்க மறு’ படத்தைத் தொடர்ந்து தற்போது ‘கோமாளி’ படத்தில் நடித்து வருகிறார் ஜெயம் ரவி. அறிமுக இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இந்தப் படத்தை இயக்குகிறார். ஹீரோயின்களாக காஜல் அகர்வால் மற்றும் சம்யுக்தா ஹெக்டே இருவரும் நடிக்கின்றனர்.

கே.எஸ்.ரவிகுமார், யோகி பாபு, கோவை சரளா, பிரேம்ஜி அமரன், ஆஷிஷ் வித்யார்த்தி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி இசையமைக்கிறார். வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார்.

இது ஜெயம் ரவியின் 24-வது படம். 25-வது படமாக ‘தனி ஒருவன் 2’ படத்தை இயக்குகிறார் மோகன் ராஜா. அதற்கான முன்தயாரிப்புப் பணிகளில் தற்போது ஈடுபட்டு வருகிறார் மோகன் ராஜா.

இந்நிலையில், அடுத்ததாக அஹமது இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ‘வாமனன்’, ‘என்றென்றும் புன்னகை’, ‘மனிதன்’ ஆகிய படங்களை இயக்கியவர் அஹமது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close