[X] Close

சபரிமலை ஐயப்பனை மையப்படுத்தி படம்: அனுஷ்கா - ஏ.ஆர்.ரஹ்மானிடம் பேச்சுவார்த்தை


sabarimala

  • kamadenu
  • Posted: 11 Mar, 2019 18:13 pm
  • அ+ அ-

சபரிமலை ஐயப்பனை மையப்படுத்தி படமொன்று உருவாகவுள்ளது. சந்தோஷ் சிவன் இயக்கவுள்ள இப்படத்தில் நடிக்க அனுஷ்காவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

2018-ம் ஆண்டு சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்கலாம் என்று உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு பெரும் சர்ச்சையாக உருவெடுத்தது. இதனைத் தொடர்ந்து சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்கள் நுழைய முயற்சி செய்து, பெரும் போராட்டமாக வெடித்தது. இதை மீறி 2 பெண்கள் நுழைந்து ஐயப்பனை தரிசனம் செய்தார்கள். இப்போது வரை இச்சர்ச்சை நீடித்து வருகிறது.

தற்போது சபரிமலை ஐயப்பனை மையப்படுத்தி படமொன்று உருவாகவுள்ளது. இதனை ஸ்ரீ கோகுலம் கோபாலன் தயாரிக்கவுள்ளார். பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்கவுள்ளார். ஆகஸ்ட் - செப்டம்பரில் படப்பிடிப்பு தொடங்க படக்குழு ஆயத்தமாகி வருகிறது.

தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் உருவாக்கத் திட்டமிட்டுள்ளனர். இதில் நடிப்பதற்காக அனுஷ்காவிடம் பேசியுள்ளனர். இசையமைப்பாளராகப் பணிபுரிய ஏ.ஆர்.ரஹ்மானை அணுகியுள்ளனர்.

4 மொழிகளில் உருவாகவுள்ளதால், அதற்கு ஏற்ப நடிகர்களை ஒப்பந்தம் செய்யலாம் என்று படக்குழுவினர் ஆலோசிக்கத் தொடங்கியுள்ளனர். விரைவில் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close